செப். 8 - உலக எழுத்தறிவு தினம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 10, 2022

செப். 8 - உலக எழுத்தறிவு தினம்

ஒரு மொழியை எழுதவும், படிக்கவும் தெரிந் திருப்பதே எழுத்தறிவு, ஒவ்வொரு தனி மனிதனும் எழுத்தறிவு பெற்றிருப்பது, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது. எழுத்துக்களைப் படிப்பது அறிவை வளர்க்க உதவும். எழுத்தும், அறிவும் ஒன்று சேர்க்கையில் தனித்து செயல்படுவதற்கான ஆற்றல் கிடைக்கும். அந்த ஆற்றலே ஆக்கப்பூர் வமான பல செயல்களுக்கு அடிப்படையாக அமையும்.

எழுத்தறிவு பெற்றவரால் மட்டுமே தனக்கான உரிமை, பாதுகாப்பு, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றை புரிந்து செயல்பட முடியும். குறிப்பாக பெண்களுக்கு எழுத்தறிவும், கவ்வியறிவும் அவ சியமானவை. எழுத்தறிவின்மையை போக்குவதற் காக அரசும், தொண்டு நிறுவனங்களும் பல்வேறு திட்டங்களின் மூலம் முயற்சிகள் மேற் அஸ்தி வாரமான எழுத்தறிவை, அனைவரும் பெறுவதற்கு நம்மால் முடிந்த முயற்சிகளை செய்வோம்.

No comments:

Post a Comment