பெண் என்றால் போகப் பண்டமா? நாள்தோறும் சராசரியாக 86 பாலியல் வன்முறைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 2, 2022

பெண் என்றால் போகப் பண்டமா? நாள்தோறும் சராசரியாக 86 பாலியல் வன்முறைகள்

புதுடில்லி, செப்.2- கடந்த ஆண்டில் 'இந்தி யாவில் நடந்த குற்றங்கள்' என்ற தலைப்பில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல் படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு புள்ளிவிவர அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதில், கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 31 ஆயிரத்து 677 பாலியல் வன்முறை வழக் குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு 86 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகி உள்ளன. அதிக அளவாக ராஜஸ் தான் மாநிலத்தில் 

6 ஆயிரத்து 337 பாலியல் வன்முறை வழக் குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசம் (2,947 வழக்குகள்), மராட்டியம் (2,496), உத்தரப்பிரதேசம் (2,845), டில்லி (1,250) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.  

அதுபோல், பெண்களுக்கு எதிரான 4 லட்சத்து 28 ஆயிரத்து 278 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, மணிக்கு சராசரியாக 49 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. அதிக அளவாக உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 56 ஆயிரத்து 83 வழக்குகள் பதிவாகி உள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாலியல் வன்முறை, பாலியல் வன்முறையில் கொலை, வரதட்சணைக் கொடுமை, ஆசிட் வீச்சு, தற்கொலைக்கு தூண்டுதல், கட்டாயத் திருமணம், ஆள் கடத்தல் ஆகியவை அடங்கும்.   கடந்த ஆண்டு, நாடு முழுவதும் 52 ஆயிரத்து 974 இணைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இது முந்தைய ஆண்டை விட 5 சதவீதம் அதிகம். இவற்றில் 70 சதவீத இணைய குற்ற வழக்குகள் தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், கருநாடகா, மராட்டியம், அசாம் ஆகிய மாநி லங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில், 15 இணைய பயங்கரவாத வழக்குகளும் அடங்கும். 


No comments:

Post a Comment