சமுதாய சீர்திருத்தப் பணி மற்ற பணிகளைப் போல் சாதாரணப் பணியா? மக்களின் வெறுப்பிற்கும், ஏச்சுப் பேச்சுக்கும் ஆளாகி அவர்கள் நீண்ட காலமா கக் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும், நடப்பிற்கும் விரோதமாகச் செய்யும் பணியல்லவா? சமுதாயச் சீர்திருத்தப் பணிக்கு என்ன வேண்டுமோ அதையே சிறப்புப் பெயராகக் கொண்டவர் அண்ணா ஆவார். ‘அறிஞர்' என்கின்ற வேறு எவருக்கும் கிடைத்தற்கரிய பெயரையே பெற்றவர் அண்ணா. அன்றி வேறு யார்? நம் நாட்டில் இதற்கு முன்பாக இது போல் பெயர் பெற்றிருந்தவர் புத்தர் அன்றி வேறு யார்? புத்தியைக் கொண்டு சிந்தித்தாலேயே அவர் புத்தரானார். அறிஞர் என்ற பெயர் பெற்ற அண்ணாவைப் போலன்றி பிறரால் பகுத்தறிவுப்படியான சமுதாயச் சீர்திருத்தப் பணியைச் செய்ய முடியுமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment