கழகத் தலைவர் ஆசிரியரிடம் வாழ்த்து பெற்றார்
நேற்று (9.9.2022) மாலை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை இல்லத்தில் சந்தித்து, சென்னை ஆடிட்டர் அர. இராமச்சந்திரன் அவர்கள் இன்று (10.9.2022) துவங்கும் தமது 60ஆம் ஆண்டு பிறந்த நாளுக்கான வாழ்த்துக்களைப் பெற்றார்!
பிரபல சென்னை ஆடிட்டரான அவர் ஒரு சிறந்த பகுத்தறிவுக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பகுத்தறிவாளர்.
கழகத் தலைவரிடம், தமது 60ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாளையொட்டி திருச்சி சிறுகனூர் 'பெரியார் உலக'த்திற்கு ரூபாய் அய்ம்பதினாயிரமும், 'விடுதலை' வளர்ச்சிக்கு பத்தாயிரம் ரூபாயும் வழங்கினார்.
கழகத் தலைவரும், அவரது வாழ்விணையர் திருமதி மோகனாவும் ஆடிட்டர் இராமச்சந்திரன் - அவரது வாழ் விணையர் திருமதி வேல்விழி ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக் கூறினர்.
No comments:
Post a Comment