புதுடில்லி, செப்.11 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,554 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டும், 6322 பேர் குண மடைந்தும் உள்ளனர். ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் காலை 8மணி வரையிலான கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதில், நேற்று (10.9.2022) புதிதாக மேலும் 5,554 ஆக பதிவாகியுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 1.47 சதவிகிதமாக உள்ளது.
தற்போது, நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 48,850 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,139 பேர் ஆக உள்ளது.
இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,39,13,294 ஆக பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 2,14,77,55,021 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நேற்று(10.09.2022) ஒரே நாளில் 21,63,811 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment