சென்னை, செப்.21 5,104 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 46 நகரசபைகளில் 100 சதவீதம் அளவுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் தொகையின் எண்ணிக்கை 7 கோடியே 64 லட்சத்து 2 ஆயிரம் ஆகும். இதில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் 21 லட்சத்து 21 ஆயிரம் பேரும், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 33 லட்சத்து 46 ஆயிரம் பேரும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் பேரும், 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 கோடியே 12 லட்சத்து 37 ஆயிரம் பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1 கோடியே 4 லட்சத்து 19 ஆயிரம் பேரும் கரோனா தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களாக உள்ளனர். 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களில் 19 லட்சத்து 86 ஆயிரத்து 461 பேர் முதல் தவணையும், 15 லட்சத்து 66 ஆயிரத்து 430 பேர் 2-வது தவணையும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் 30 லட்சத்து 53 ஆயிரத்து 611 பேர் முதல் தவணையும், 25 லட்சத்து 95 ஆயிரத்து 960 பேர் 2-ஆவது தவணையும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 கோடியே 58 லட்சத்து 87 ஆயிரத்து 357 பேர் முதல் தவணையும், 5 கோடியே 28 லட்சத்து 96 ஆயிரத்து 186 பேர் 2ஆ-வது தவணையும் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள்
100 சதவீதம்
15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 கோடியே 89 லட்சத்து 40 ஆயிரத்து 968 பேர் முதல் தவணையும், 5 கோடியே 54 லட்சத்து 92 ஆயிரத்து 146 பேர் 2-ஆவது தவணையும், 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 கோடியே 9 லட்சத்து 27 ஆயிரத்து 429 பேர் முதல் தவணையும், 5 கோடியே 70 லட்சத்து 58 ஆயிரத்து 576 பேர் 2-ஆவது தவணையும் தடுப்பூசி போட்டிருக்கிறார் கள். சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கும் மேற்பட் டவர்கள் உள்பட 86 லட்சத்து 9 ஆயிரத்து 799 பேர் பூஸ்டர் தவணை செலுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் நடைபெற்ற 37 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலமாக முதல் தவணை, 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை 5 கோடியே 43 லட்சத்து 55 ஆயிரத்து 433 பேர் செலுத்தி பயன் அடைந்துள்ளனர்.
12 ஆயிரத்து 585 கிராம பஞ்சாயத்து க்களில் 5 ஆயிரத்து 104 பஞ்சாயத்துகளிலும், 121 நகராட்சிகளில் 46 நகராட்சிகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை அடைந் துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் நேற்று முன்தினம் வரையிலான நிலவரப்படி 24 லட்சத்து 30 ஆயிரத்து 571 பேர் முதல் தவணையும், 81 லட்சத்து 62 ஆயிரத்து 426 பேர் 2-ஆவது தவணையும் தடுப்பூசி செலுத்த வேண்டியது உள்ளது. கோவிஷீல்டு 2 லட்சத்து 16 ஆயிரத்து 972, கோவேக்சின் 6 லட்சத்து 13 ஆயிரத்து 375, கோர்பிவேக்ஸ் 4 லட்சத்து 69 ஆயிரத்து 815 தடுப்பூசிகளும் இருப்பில் உள்ளன. மேற்கண்ட தகவல்கள் பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளன.
No comments:
Post a Comment