ராணிப்பேட்டை.செப்.1- ராணிப்பேட்டை மாவட்டத்தில் உரிமம் இன்றி செயல்படும் சிறார் மற்றும் மகளிர் விடுதிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- விடுதிகள் தமிழ்நாடு சிறார், மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டத்தின் படி அனைத்து மகளிர் விடுதிகள் அல்லது இல்லங்கள் மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கான விடுதிகள், இல்லங்களுக்கு உரிமம் பெறுதல், உரிமம் புதுப்பித்தல் மற்றும் விடுதிகள், இல்லங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும், நிபந்தனைகளும் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து விதமான மகளிர், சிறார்களுக்கான விடுதிகள், இல்லங்கள்பதிவு செய்யப்பட்டு இருப்பதும், அனைத்து வழிகாட்டு நெறிமுறை களும் முறையாக பின்பற்றப்படுவதும் கட்டாயமாக்கப்பட் டுள்ளது. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து விதமான சிறார், மகளிர் இல்லங்களுக்கு உரிமம் பெற்றிட அல்லது உரிமம் புதுப்பித்திட http://tnswp.com single window portal என்ற இணையதளத்தின் வாயிலாக உரிய சான்றிதழ்களுடன் வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க தொடர்புடைய விடுதிகளின் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப் படுகிறது. ரூ.50 ஆயிரம் அபராதம் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தங்கும் விடுதி, பணிபுரியும் பெண்கள் விடுதி, கல்லூரி மாணவியர் விடுதி உள்பட அனைத்து விதமான பெண்கள் விடுதி மற்றும் இல்லங்களின் உரிமம் குறித்த தகவல்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தையும், 18 வயதிற்கு உட்பட்ட சிறார், மகளிர் விடுதி மற்றும் இல்லங்கள் உரிமம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகலாம். மேற்படி உரிமங்கள் இன்றி செயல்படும் விடுதிகள் மற்றும் இல்லங்கள், எந்த உரிமமும் பெறாமல் பணிபுரியும் மகளிரை தங்க வைத்து பணிபுரியும் மகளிர் விடுதியாக செயல்படுவது போன்றவற்றில் தொடர்புடைய நிர்வாகத்திற்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம், 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.
Thursday, September 1, 2022
உரிமம் இன்றி செயல்படும் சிறார், மகளிர் விடுதிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment