சென்னை,செப்.10- தமிழ்நாட்டில் நேற்று ஆண்கள் 245, பெண்கள் 191 என மொத்தம் 436 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 87 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 72,802 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 35 லட்சத்து 29,846 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று (9.9.2022) மட்டும் 442 பேர் குணமடைந்து வீடு களுக்கு சென்றனர். தமிழ்நாடு முழுவதும் 4,918 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்புகள் இல்லை.
தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினம் கரோனா தொற்று பாதிப்பு 442 ஆகவும், சென்னையில் 85 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தமிழ் நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை படிப் படியாக குறைந்த வண்ணம் உள்ளது. சென்னையில் பாதிப்பு அதிகரித்துள்ளது
இந்தியாவில்...
இந்தியாவில் புதிதாக 6,093 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி யுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.49,636 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
6,768 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 214.55 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment