இந்தியாவில் கரோனா 4,129 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 27, 2022

இந்தியாவில் கரோனா 4,129

புதுடில்லி, செப்.27 இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் 5ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,129 பேருக்கு கரோனா உறுதியாகி உள்ளது.

ஒன்றிய சுகாதாரத்துறை  காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, நேற்று புதிதாக மேலும் 4,129 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.51 சதவிகிதமாக உள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சையில் 43,415 பேர் உள்ளனர்.

ஒரேநாளில் 20 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,530 பேர் ஆக உள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் 4,688 பேர் குணமடைந்துள் ளனர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,00,298 ஆக பதிவாகியுள்ளது.

உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கரோனா வால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 43,415 ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை  2,17,68,35,714 டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 11,67,772 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment