உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு வழக்கு: 3 முக்கிய கேள்விகள் குறித்து விவாதம் - உச்சநீதிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 11, 2022

உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு வழக்கு: 3 முக்கிய கேள்விகள் குறித்து விவாதம் - உச்சநீதிமன்றம்

புதுதில்லி, செப்.11  உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது தொடர் பான வழக்கில், முதலாவதாக, பிரதானமாக எழும் 3 கேள் விகள் குறித்தே உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளதாக அரசியல் சாசன அமர்வு தெரிவித் துள்ளது. கடந்த 2019ஆ-ம் ஆண்டு, பொருளா தாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதி யின ருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி ஒன்றிய பாஜக அரசு உத்தரவிட்டது. இது அரச மைப்பு சட்டத்திற்கு புறம் பானது என அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புகள் உச்ச  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான 5 நீதிபதி கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கு களை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், 8.9.2022 அன்று நடைபெற்ற விசார ணையின்போது, 10 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கு வதற்கான அரசமைப்பின் 103-ஆவது சட்டத் திருத்தத்தில் 3 முக்கியக் கேள்விகள் எழுந் துள்ளதாகவும், முதலில் அது பற்றியே விரிவாக விவாதிக் கப்படும் என்றும் அரசியல் சாசன அமர்வு அறிவித்தது. அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணு கோபால் அளித்த பரிந்துரைகளின் அடிப் படையில் இந்த விசாரணை நடக்கும் என்றும் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கொள்கை களை மீறும் வகையில் இந்த சட்டத்தை  திருத்தும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு இருக்கிறதா?  தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளிப்பதற்கு  அரசுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கியதில் அரசமைப்பு சட்டம் மீறப்பட் டுள்ளதா? இந்த சட்ட திருத்தத்தினால் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு பாதிக்கப்படுமா? - ஆகிய இந்த 3 முக்கிய கேள்விகள் குறித்து  விவாதம் நடத்தப்படும் என் றும் அரசியல் சாசன அமர்வு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment