அரியலூரில் ஜூலை 30 ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டிற்காக திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நாடு முழுவதும் கடைவீதிகளில் நன்கொடை திரட்டப்பட்டது. மாநாட்டு செலவு போக மீதமிருந்த தொகை (ரூ.50,000) 25 விடுதலை ஆண்டு சந்தாவாக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் முன்னிலையில் மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.
மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் இரா.வெற்றிக்குமார், சோ.சுரேஷ், தா.தம்பிபிரபாகரன், அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மண்டலத் தலைவர் கோவிந்தராசன், மண்டலச் செயலாளர் சு.மணிவண்ணன், மாவட்ட அமைப்பாளர் ரத்தின. ராமச்சந்திரன், தொழிலாளர் அணித் தலைவர் சிவக்கொழுந்து, மாவட்ட துணைச் செயலாளர் சங்கர், அரியலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர் பொன்.செந்தில்குமார், கோவை மண்டல இளைஞரணிச் செயலாளர் முனீஸ்வரன், திருவாரூர் மண்டல இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, ஈரோடு மண்டல இளைஞரணிச் செயலாளர் வெற்றிவேல், வட சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் வழக்குரைஞர் தளபதி. பாண்டியன், நாகை மாவட்ட இளைஞரணித் தலைவர் சு. ராஜ்மோகன், திண்டிவனம் மாவட்ட இளைஞரணித் தலைவர் இரமேஷ், மேட்டுப்பாளையம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீரமணி ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment