சென்னை, செப்.9 சென்னை மாநக ராட்சியில் மேலும் 3 இடங்களில் உயிரி எரிவாயு மய்யம் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்து உள்ளார்.
சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் துறை மூலம் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்களுக்கான பயிற்சி முகாம் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது. முகாமுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- சென்னை மாநகராட்சியின் சார்பில் அண்ணாநகர் மண்டலம் சேத்துப்பட்டு பகுதியில் உயிரி எரிவாயு மய்யம் செயல்பட்டு வருகிறது. இங்கு மக்கும் குப்பைகளின் ஈரக்கழிவுகள் மூலம் உயிரி எரிவாயுவாகவும் மறுசுழற்சி செய் யப்படுகிறது. இதேபோல் கொடுங்கையூர் மற்றும் மாதவரம் பகுதிகளில் உயிரி எரி வாயு மய்யம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சியின் 3 இடங்களில் உயிரி எரிவாயு மய்யம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உயிரி எரிவாயு மய்யங்களில் குப்பைகளை அனுப்பும் போது அவை முறையாக தரம்பிரித்து அனுப்ப வேண்டும். இல்லையெனில் இந்த உயிரி எரிவாயு மய்யங்களின் செயல்பாடு பாதிக்கப்படும். எனவே, சென்னை மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது மக்களிடமிருந்து குப்பைகளை வாங்கும் போது அவற்றை தரம் பிரித்து வழங்க பரப்பு ரையாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்த எடுத்துக்காட்டுடன் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறப்பாக பணிபுரியும் பரப் புரையாளர்களுக்கு மாதம் தோறும் விருதுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment