போபால், செப்.10- மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரூ. 2,500 கோடி மதிப்பிலான சத்துணவுத் திட்டத்தில், ஆளும் பாஜக அரசு மாபெரும் ஊழலை அரங்கேற்றி இருப்பதாக, சிஏஜி அறிக்கை மூலம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய் மார்கள் மற்றும் பள்ளிக்கு வெளியே உள்ள இளம்பெண்கள் ஆகியோருக்கு உலர் உணவு மற்றும் சமைத்த பொருள் களை உள்ளடக்கிய சத்துணவு வழங் குவதற்காக மத்தியப் பிரதேசத்தில் ரூ. 2,500 கோடி மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில், இத்திட்டத்தில் சத்துணவு தயாரிப்பு, போக்குவரத்து, விநியோகம் மற்றும் அதன் தரக்கட்டுப்பாடு ஆகிய பல அம்சங்களிலும் ஊழல் நடந்திருப்ப தாக மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை அளித் துள்ளார்.
பயனாளிகளின் எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளது மற்றும் உணவுப் பொருள்கள் கொண்டு செல்வதற்காக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்கள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் எண்களாக இருக்கின்றன என்றும் சிஏஜி கண்டுபிடித்து கூறியுள் ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் ஆளும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக சிபிஅய் விசார ணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில்,
“இது மிகப் பெரிய ஊழல். இந்த ஊழலில் கோடிக் கணக்கில் பணம் சம்பந்தப்பட்டுள்ளது. நாங்கள் இது குறித்து புகார் அளிக்க உள்ளோம். மேலும், இதனை சிபிஅய் விசாரிக்கவும் வேண்டுகோள் வைக்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
‘‘மத்தியப் பிரதேச மாநிலத்தில் சத் துணவுத் திட்டத்தை செயல்படுத்தும் துறை மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானின் நேரடிக் கட்டுப் பாட்டில் வருவதால், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு சிபிஅய் விசாரணை மேற்கொள்ள வழிவகை செய்யவேண்டும்” என்றும் அவர் கூறி யுள்ளார். இதனிடையே, எதிர்க்கட்சி களின் குற்றச்சாட்டை முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மறுத்துள்ளார்.
“மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட் டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் மத்திய தலைமைக் கணக் குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை இறுதியானது அல்ல” என்று கூறியி ருக்கும் அதேநேரத்தில், “காங்கிரசின் 2018 முதல் 2020 வரையிலான ஆட்சிக் காலத்தில் தான் இந்த முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் சமாளித்துள்ளார்.
ஆனால், சவுகானின் இந்த சமா ளிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் கே.கே. மிஸ்ரா, “குறிப்பிட்ட காலத்தில் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய் தாலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக இருந்தவர் தற்போது பாஜகவிலுள்ள இமார்தி தேவிதான்” என்பதை சவு கானுக்கு நினைவுபடுத்தியுள்ளார்.
ஜோதிராதித்ய சிந்தியா தலைமை யில் இமார்த்தி தேவி உள்ளிட்ட 22 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுத்துத்தான் மத்தியப் பிரதேச மாநிலத்தில் குறுக்கு வழியில் சிவ்ராஜ் சிங் ஆட்சியமைத்தார். எனி னும் இடைத்தேர்தலில் இமார்தி தேவி தோற்றுப் போனதால், அவர் அமைச் சராக பொறுப்பு வகித்து வந்த பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையை முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தனக்குக்கீழ் எடுத்துக்கொண்டார். தற் போது அந்தத்துறை சிவ்ராஜ் சிங் சவுகான் வசமே உள்ளது என்பதையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
No comments:
Post a Comment