மாலை 6.15 மணிக்கு அன்னை மணியம்மையார் அரங்கில் கூடுமாறு கேட்டுக்கொள்கிறோம்!
பெரியார் பன்னாட்டமைப்பும், அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு மனிதநேய பகுத்தறிவு அமைப்புகளும் இணைந்து நடத்தும் மனிதநேய சமூகநீதி மாநாடு டொரோண்டோ நகரில் நடக்கவிருக்கிறது. 24 ஆம் தேதி முதல் நாள் மாநாட்டின் நிகழ்வு மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெறுவதை காணொலிமூலம் காணலாம். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உரைக்குப்பின், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். உலகின் பன்னாட்டுப் பேராளர்கள் மாநாட்டில் அரிய உரையாற்றவிருக்கிறார்கள்.
மேற்கண்ட நிகழ்வுகளை 24 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6.15 மணிமுதல் சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் காணொலிமூலம் கண்டு களிக்க வாருங்கள் தோழர்களே!
No comments:
Post a Comment