வீ.குமரேசன்,
பொருளாளர், திராவிடர் கழகம்
அமெரிக்க நாட்டு பெரியார் பன்னாட்டு மய்யம் (Periyar International, USA) ஆய்வு விசாரணைக்கான மய்யம், கனடா கிளை (Centre for Inquiry, Canada Chapter) மற்றும் கனடா மனிதநேயர் அமைப்பு (Humanist, Canada) டொராண்டோ மனிதநேயர் சங்கம் (Humanist Association of Toranto) ஆகிய அமைப்பினர் இணைந்து சமூகநீதிக்கான பன் னாட்டு பெரியார் மனிதநேய மாநாடு கனடா நாட்டு டொராண்டோ நகரில் 2022 செப்டம்பர் 24, 25 ஆகிய இரு நாள்களிலும் சிறப்பாக நடத்துகின்றனர்.
டொராண்டோ நகரில் (ON MIG 318) நூற்றாண்டு கல்லூரி நிகழ்வுகள் மய்யத்தில் (Centennial College Event Centre) நடை பெறவுள்ள பன்னாட்டு மாநாட்டிற்கு உலகின் பல பகுதிகளிலிருந்து அறிஞர் பெருமக்கள், மனிதநேயத் தலைவர்கள், பகுத்தறிவாளர் அமைப்பின் தலைவர்கள், சமூகநீதி அமைப் பின் செயல்பாட்டாளர்கள் மிகப் பலர் கலந்து கொண்டு உரை ஆற்றிட உள்ளனர்.
முதல் நாள் நிகழ்வுகள் (24.09.2022)
தமிழர் தலைவரின் தொடக்க உரை
முதல் நாள் நிகழ்வின் தொடக்க அரங்கத்தில் திராவிடர் கழகத்தின் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாடு முக் கிய உரையினை ஆற்றி மாநாட்டினைத் தொடங்கி வைக்கின்றார். ‘ஜாதி அமைப்பினை ஒழித்து சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகள்’ எனும் தலைப்பில் தொடக்க உரை ஆற்றுகிறார்.
மாநாட்டிற்கு வருகை தந்து உரை ஆற்றிட உள்ள பெருமக்களையும், பங்கேற்றுச் சிறப் பிக்கும் பேராளர்களையும் பெரியார் பன் னாட்டு மய்யத்தின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் வரவேற்றுப் பேசுகிறார். உரை ஆற்றிட உள்ள பெருமக்கள் பற்றி பேராசிரியர் டாக்டர் கண்ணபிரான் ரவிசங்கர் அறிமுகம் செய்கிறார்.
அடுத்து பேசிட வரும் அறிஞர் ஹேமந்த் மேத்தா (ஆசிரியர், நட்புறவுடனான நாத்திகர் ஏடு) மனித நேயத்திற்கு எதிரான தடைகளுள் ஒன்றான ‘ஜோதிட பொய் நம்பிக்கை’ பற்றியும், மனிதநேய டொராண்டோ அமைப்பினைச் சார்ந்த ரிச்சர்ட் டவ்செட், ‘கனடா நாட்டிற்கு வரும் வெளிநாட்டவரின் கேள்விகளுக்கான மனிதநேயர் விடை’ என்ற தலைப்பிலும் உரை யாற்றுகின்றனர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் வீ.அரசு, ‘தமிழ்நாட்டில் சமூகநீதி - நேற்று, இன்று, நாளை’ எனும் தலைப்பில் உரையாற்றுகிறார். அடுத்து, ‘மனிதநேயத்தின் மூலம் பெண்களின் உரிமைகளை வென்றெ டுக்கும் வழிகள்’ என்பது பற்றி ‘கனடா மனித நேயர்’ அமைப்பினைச் சார்ந்த சிருஷ்டி ஹுக்கு பேசுகிறார். அடுத்து, ‘ஜாதி முறையின் சமூக அரசியல் மற்றும் சமூகநீதி - சிறீலங்கா’ எனும் தலைப்பில் பெரடேனியா பல்கலைக் கழகத்தைச் சார்ந்த முனைவர் எஸ்.சிவசேகரம் உரையாற்றுகிறார்.
நண்பகலுக்குப் பின், தமிழ்நாடு - கோயம் புத்தூர் நக்கலைட்ஸ் யுடியூப் குழுவினர் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்தோரிடம் நிலவிடும் ஜாதி முறை - சமூகநீதி பற்றிய ஒரு நகைச்சுவை நாடகம் நடைபெறும்.
‘பெரியார் உலகம்’
அடுத்து, திருச்சி - சிறுகனூரில் தேசிய நெடுஞ்சாலை அருகில் பேருருவாக அமைக் கப்பட்டுள்ள ‘பெரியார் உலகம்’பற்றிய முன் னோட்டம் பற்றி திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் விளக்கவுரை ஆற்று கின்றார்.
மாலை நிகழ்வில் ‘கனடா மனிதநேயர்’ அமைப்பினைச் சார்ந்த மார்ட்டின் பிரித், ‘அன்றாட வாழ்வு நிகழ்வுகளில் சமூகநீதி’ எனும் தலைப்பில் பேசுகிறார். அடுத்து, ‘சமூகநீதிக் கான அணுகுமுறைகள் - பெரியாரும் பிற சீர்திருத்தவாதிகளும்’ எனும் தலைப்பில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் உரையாற்றுகிறார்.
‘பழங்கட்டுக் கதைகளும் உண்மைகளும்’ எனும் தலைப்பில் கனடா பெரியார் அம்பேத்கர் ஆய்வு வட்டத்தைச் சார்ந்த குழுவினர், கலந் துரையாடி விரைவு வினா-விடை நிகழ்ச்சி யினை நடத்தவிருக்கின்றனர்.
‘திருவள்ளுவரும் சமூகநீதியும்’ எனும் தலைப்பில் வடக்கு கரோலினா பல்கலைக்கழக மாணவர் அமரன் கண்டியார் பேசுகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர்
மாண்புமிகு மு.க.ஸ்டாலின் உரை
மாநாட்டுப் பேருரையினைத் தமிழ்நாடு முத லமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி வழியாக வழங்கிச் சிறப்பிக்கின்றார்.
அடுத்து, ‘பசிப்பிணிக்கு எதிரான மழலையர்’ (Kids Against Hunger) நிகழ்ச்சியில் உணவுப் பொட்டலங்களைத் தயார் செய்திடும் குழு நிகழ்வு நடைபெறும்.
மாலையில் டொராண்டோ தமிழ்ச் சங்கத் தினர் ஏற்பாட்டில் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் மன மகிழ்வு நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறும்.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் - 25.9.2022
இரண்டாம் நாள் நிகழ்வின் வரவேற் புரையினை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் பொருளாளர் அருள்செல்வி வீரமணி அவர்கள் வழங்குகிறார்.
முதல் நாள் நிகழ்வின் தொகுப்பினை டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களும், முகப்புரையின் அறிமுகத்தை பேராசிரியர் முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் அவர் களும் வழங்குகின்றனர்.
தமிழர் தலைவர் வழங்கிடும் முகப்புரை
இரண்டாம் நாள் நிகழ்வின் முகப்புரையாக ‘மனிதநேயம் மற்றும் சமூகநீதி’ எனும் தலைப் பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பொழிவினை வழங்குகிறார்.
திராவிட மாடல்
‘சமூக நீதியின் திராவிட மாடல்’ எனும் தலைப்பில் இந்திய நாடாளுமன்ற தருமபுரி தொகுதி உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் உரையாற்றுகிறார்.
‘அனைவருக்குமான வெளிப்படைத்தன்மை - திருக்குறளும் சமூகநீதியும்’ எனும் தலைப்பில் தாமஸ் ஹிடோஷி புர்க்ஸ்மா பேசுகிறார்.
பேராசிரியர் முனைவர் கண்ணபிரான் ரவி சங்கர், ‘சமூகநீதியும் தமிழக வரலாறும்’ எனும் தலைப்பில் ஆய்வு உரையினை வழங்குகிறார்.
‘குழந்தைகள் மற்றும் மகளிருக்கான உரிமை யில் மனிதநேயம்’ எனும் தலைப்பில் லெஸ்லி ரோஸன்பிளட் (CFIC) உரையாற்றுகிறார்.
அடுத்து டொராண்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மறைதிரு. சந்திரகாந்தன் அவர்கள் ‘புலம் பெயர்ந்தோருக்கான (தமிழர்கள்) மனித நேய தீர்வுகள்’ எனும் தலைப்பில் உரையாற்று கிறார்.
அடுத்து, ‘மனிதநேய உணர்விலான தட்ப வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல்’ எனும் தலைப்பில் பேராசிரியர் முனைவர் அரசு.செல்லையா கருத்துரை வழங்குகிறார்.
கனடா நாட்டு சிறீகதிர்காமநாதன் அண்ணா மலை அவர்கள், ‘சிறீலங்காவில் சமூகநீதியும் மனித நேயமும்’ என்பது பற்றி உரையாற்றுகிறார்.
அடுத்து திராவிட அறிஞர் பேரவையினைச் சார்ந்த புகழ் காந்தி அவர்கள் ‘இளைஞர்களை மதச்சார்பின்மை அடிப்படையில் உணர்வூக்கப் படுத்திடும் நடைமுறைகள்’ எனும் தலைப்பில் உரையாற்றுகிறார்.
நண்பகல் உணவுக்குப் பின்னர் ‘திராவிட இளைஞர் நகைச்சுவை’ அரங்க நிகழ் வினை இளங்கதிர் இளமாறன் மற்றும் நிகில் முனியப்பன் வழங்குகின்றனர். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள், ‘பெரியாரிடம் ஊக்க உணர்வு பெற்றிடும் இன்றைய இளைஞர்களும் சமூகநீதியும்’ எனும் தலைப்பில் உரையாற்றுகிறார்.
மாலை நிகழ்வில் “சமூகநீதி - திராவிட மாடலும் கனடா மாடலும்’’ எனும் தலைப்பில் கனடா நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்த்சங்கரி உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து கனடா நாட்டு அரசாங்கத்தின் பிரதிநிதி பங்கேற்று உரையாற்றுகிறார்.
அடுத்து, ‘மாணவர் கலந்துரையாடல் CFIC, கனடா மனிதநேயர் மற்றும் டொராண்டோ மனிதநேயர் சங்கத்தின் சார்பில் இணை நிகழ்வாக ஆங்கிலத்தில் நடத்தப்படுகிறது.
திராவிடர் கழகம்
மற்றொரு இணை நிகழ்வாக, திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்று ‘சமூகநீதி யின் அடுத்த கட்டம்’ எனும் தலைப்பில் தமிழில் நிகழ்வினை நடத்துகின்றனர்.
மாநாட்டு நிறைவாக, மாநாட்டுத் தொகுப் பினை வழங்கி, வழியனுப்பு உரையினை பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் ஆற்றுகிறார்.
மாநாடு இனிதாக நிறைவு பெற்றிட சிறப் பாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், தோழர் கள் மற்றும் பல நாடுகளிலிருந்தும் அறிஞர் பெருமக்கள், கல்வியாளர்கள், இயக்கச் செயல் பாட்டாளர்கள் கலந்துகொள்ள டொராண்டோ நகருக்கு வருகை தந்துள்ளனர். டொராண்டோ நகரில் வாழும் தமிழர்களின் முயற்சியில் - ஒருங்கிணைப்பில் சமூகநீதிக்கான பன்னாட்டு மனிதநேய மாநாட்டிற்கு பெருந்திரளாக வருகை தந்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தந்தை பெரியாரின் சமூகநீதி, மனிதநேயம் கொள்கைப் பயணத்தில் அடுத்தகட்ட விரிவாக் கத்தினை உருவாக்கிடும் வகையில் பன்னாட்டு மாநாடு நடைபெறுகிறது.
No comments:
Post a Comment