திருப்பத்தூர், செப். 12- தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாள் விழாவை முன் னிட்டு நகரம் முழுவதும் 200 இடங்களில் பெரியார் படங்களை வைத்து சிறப்பு செய்வது என்று தீர்மானம்.
திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் 10.9.2022 அன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்ட தலை வர் கே.சி.எழிலரசன் தலைமை வகித்தார் நகர தலைவர் தோழர் காளிதாஸ் வரவேற்புரையில் நடந்த இக்கூட்டத்தில் வட்டாட் சியர் அலுவலகத்தில் அமைந் துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அனைத்து கட்சி தோழர்களும் ஊர்வலமாக சென்று வி. பி. சிங் திருமண மண்ட பம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த ஊர்வலத் தில் பறை ஓசையுடன் குழந்தைகள் பெரியார் வேடம் அணிந்து பங் கேற்பது என்றும், மேலும் நகரம் முழுவதும் சுமார் 200 இடங்களில் பெரியார் படங்களை வைத்து மாலை அணிவித்து சிறப்பு செய் வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் கழக பொறுப் பாளர்கள் திரளாக பங்கேற்றனர். தோழர் மணிமொழி அவர்கள் நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment