‘அடவிநாயகா!’ பிள்ளையார் பொம்மை ஊர்வலம்:19 பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 11, 2022

‘அடவிநாயகா!’ பிள்ளையார் பொம்மை ஊர்வலம்:19 பேர் உயிரிழப்பு

மும்பை, செப்.11 மகாராட்டிரத்தில் விநா யகர் சிலைகள் கரைப்பின் போது ஏற் பட்ட விபத்துகளில் சிக்கி 19 பக்தர்கள் பலியானார்கள். மகாராட்டிரத்தில் 10 நாட் களாக வைக்கப்பட்ட பிள்ளையார் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பதோடு கொண்டாட்டம் முடிவுக்கு வந்தது.

மும்பை உள்பட மகாராட்டிரா மாநிலம் முழுவதும் 09.09.2022 அன்று பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. கரோனா கட்டுப்பாடுகளால் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பிள்ளையார் சிலை ஊர்வலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் மகாராட்டிராவில் பிள்ளையார் சிலை கரைப்பின் போது 19 பேர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதில் 14 பேர் நீர்நிலைகளில் மூழ்கி பலியானது தெரியவந்து உள்ளது. இதேபோல பன்வெல், வாத்கார் கோலிவாடாவில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் சிலை கரைக்க சென்ற 11 பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 9 மாத பெண் குழந்தையும் அடங்கும். இதுதவிரவும் மகாராட்டிரா மாநிலத்தில் சிலை கரைப்பின் போது ஒரு சில இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்பட்டன. இதேபோல புனே நகர், ஊரகப்பகுதி, சந்திராப்பூர் ஆகிய இடங்களிலும் இரு தரப்பினர் இடையே சிறு, சிறு மோதல்கள் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment