தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாள் விழாவின் ஒரு நிகழ்வான "சமூகநீதி நாள் உறுதிமொழி" ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா தலைமையில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.
தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் குருதிக் கொடை முகாமை இக்கல்லூரி முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா அவர்கள் துவக்கி வைத்தார்கள். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் மற்றும் குழுவினர் கலந்து கொண்ட குருதிக் கொடை முகாமில் 50க்கும் மேற்பட்ட இக்கல்லூரி மாணவ, மாணவிகள் குருதிக் கொடை வழங்கினார்கள்.
No comments:
Post a Comment