பெரியார் மணியம்மை அறிவியல் - தொழில்நுட்ப நிறுவனத்தில் தந்தை பெரியாரின் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் சமூகநீதிநாள் விழா - மாணவர்கள் குருதிக்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 20, 2022

பெரியார் மணியம்மை அறிவியல் - தொழில்நுட்ப நிறுவனத்தில் தந்தை பெரியாரின் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் சமூகநீதிநாள் விழா - மாணவர்கள் குருதிக்கொடை

தஞ்சை, செப். 20- தஞ்சை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையும் இணைந்து தந்தை பெரியாரின் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் - சமூக நீதிநாள் விழா 16.9.2022 அன்று பல்நோக்கு உள்விளையாட்டரங் கில் காலை 10 மணிக்கு மொழி வாழ்த்துடன் இனிதே தொடங்கி யது. 

விழாவில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர் சி.ராஜகோபாலன் வரவேற்புரை வழங்கினார். தஞ்சை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன துணை வேந்தர் பேராசிரியர் செ.வேலு சாமி தலைமை உரை நிகழ்த்தினார்.  பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய இயக்குநர் முனைவர் நம்.சீனி வாசன் சமூகநீதி நாளுக்கான உறுதிமொழியினை முன்மொழிய அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

தோள் சீலைப் போராட்டம்

நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் தி.செந்தில்வேல் சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொண்டு இன்றைக் கும் பெரியார் தேவை எனும் தலைப்பில் நிகழ்த்திய சிறப்புரை யில், இந்தியா முழுவதும் ஜாதிப் பெயர்கள் மனிதர்களின் பெயருக் குப் பின்னால் ஒட்டிக் கொண்டிருக் கின்றன. தமிழ்நாட்டில் ஜாதிப் பட்டப் பெயர்கள் வெட்டப்பட்டி ருப்பதற்கு பெரியாரே காரணம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தோள் சீலைப் போராட்டம் நடை பெற்றது. இன்றைக்குப் பெண்க ளுக்கு அந்த உரிமை கிடைத்திருக் கிறது. வட இந்தியாவில் ஒடுக்கப் பட்ட மக்கள் மீதான அடக்குமுறை இன்றைக்கும் நடைபெற்று வருகி றது. தமிழ்நாடு தான் விழிப்புணர்வு பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது. தந்தை பெரியாரை ஒரு சகாப்தம் எனலாம். 

மனிதனின் முன்னேற்றத்திற்குத் தடைக் கல்லாகக் கடவுள் இருப்ப தால் கடவுள் எதிர்ப்பைக் கையில் எடுத்தார். தீண்டாமை என்பது சமத்துவத்திற்கு எதிரானது. பெரியார் கலகக் குரல் எழுப்பினார். தீண்டாமையை உருவாக்கியது கடவுளே என்ற கருத்தை முன் வைத்தபோது அவர் கடவுளையும் எதிர்க்கத் துணிந்தார். தந்தை பெரியா ரின் கருத்துகளும் டாக்டர். அம் பேத்கர் அவர்களின் கருத்துகளும் ஒத்த சிந்தனைகள் கொண்டவை. அம்பேத்கரை எதிர்க்கத்  துணியா மைக்குக் காரணம் வாக்கு வங்கியே. கல்லடியும் சாணத்தின் வீச்சும் - செருப்பு எறிதலும் பெரியார் வர லாற்றில் பெற்ற காயங்கள். ஆனால், அவற்றையெல்லாம் அவர் பொருட் படுத்தியதில்லை. 

மக்களின் உயர்வுக்காக இடை விடாது பாடுபட்டார். மனிதத் தன்மைக்கும் சனாதனத்துக்கும் இடையே கயிறு இழுக்கும் போட்டி போல் இடைவிடாது நடந்து கொண்டே இருக்கிறது. மனித நேயம் வெல்ல வேண்டும் என்று நல்லோர்கள் எண்ணுகிறார்கள். சமூகநீதிக்காக இடஒதுக்கீடு கொள்கை அமல்படுத்தப்படுகிறது. நீட் தேர்வால் மாணவர் சமுதாயம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அடை கின்ற கேடுகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கூறினார். 

தொடர்ந்து மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் டாக்டர் ஹம்சத்வணி நன்றி யுரை கூற நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

நாட்டுநலப் பணித் திட்டம் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல் லூரியுடன் குருதி வங்கித் துறையும் இணைந்து குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 75 மாணவர்களுக்கு மேல் குருதிக் கொடை வழங்கினர்.

No comments:

Post a Comment