தஞ்சை, செப். 27- தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா, சுயமரியாதை நாள் செப்டம்பர் 17 அன்று தஞ்சாவூர் ஒன்றியம், நகரம் முழுவதும் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், அனைத்து பகுதிகளிலும் கழகக் கொடியேற்றியும், இனிப்பு வழங்கியும் கழகத் தோழர்களால் மிக எழுச்சியோடு கொண்டாடபட்டது.
காலை 8 மணிக்கு ரெட்டிபாளையம் தொடங்கி மாலை 4 மணிக்கு மருங்குளம் பகுதியில் கொடியேற்று விழா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாபட்டது.
1. ரெட்டிபாளையம் சிவகாமி நகர் - பெரியார் சிலைக்கு மாவட்ட தலைவர் சி.அமர்சிங் மாலை அணிவித்தார், கழக கொடியினை மாநில அமைப்பாளர் இரா குணசேகரன் ஏற்றிவைத்தார்.
2. பிரவுசர் புத்தக நிலையம் - பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தல் மணிமொழி குணசேகரன்.
3. சுந்தரம் பெயிண்ட்ஸ் பகுதி - கொடியேற்றியவர் மண்டல தலைவர் மு.அய்யனார்.
4. புதிய பேருந்து நிலையம் - பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல் மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், கழகக் கொடி ஏற்றியவர் மண்டலத் தலைவர் மு.அய்யனார்
5. மன்னர் சரபோஜி கல்லூரி - கொடி ஏற்றியவர் இசையின்பன் தமிழ்ச்செல்வம்,
6. புலவர் சாமிநாதன் இல்லம் - கொடி ஏற்றியவர் - மாநில கிராமபிரசார குழு அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன்,
7. காவேரி நகர் ஆலமரம் பேருந்து நிறுத்தம்- தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார்.
8. மாதாக்கோட்டை சாலை பெரியார் மணி இல்லம் - தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு
அ.இராமலிங்கம், பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தல் மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன்,
9. நா பூபதி நினைவு பெரியார் படிப்பகம் - அழகிரி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல் ஒன்றிய குழு உறுப்பினர் வண்டார் குழலி.
10. இரா.வெற்றிக்குமார்-டாக்டர் அஞ்சுகம் பூபதி இல்லம் - பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தல் துரை. சூரியமூர்த்தி
11. குழந்தை இயேசு கோவில் பேருந்து நிறுத்தம் - கொடியேற்றியது யோவான் குமார், பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தது மாவட்ட வழக்குரைஞரணி செயலாளர் இரா.சரவணகுமார்
12. பழைய பேருந்து நிலையம் - கொடி ஏற்றியவர் மாநகர தலைவர் பா.நரேந்திரன், தந்தை பெரியார் சிலைக்கு தி.மு.க. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
13. ஜெபமாலைபுரம் - கொடியேற்றுதல் மாவட்ட தொழிலாளரணி செயலாளர் ஆட்டோ ஏகாம்பரம்
14. கீழ ராஜவீதி பெரியார் இல்லம் - கொடியேற்றுதல் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரப் பாண்டியன்.
15. தொல்காப்பியர் சதுக்கம்- கொடியேற்றுதல் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் கு.குட்டிமணி
16. நாஞ்சிக்கோட்டை ரோடு லெட்சுமணன் இல்லம் - கொடியேற்றுதல் தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டுஅ.இராமலிங்கம்
17. சூரியம்பட்டி - கொடியேற்றுதல் தஞ்சை மாநகர செயலாளர் கரந்தை ஆ.டேவிட்
18. கோபால் நகர் - கொடியேற்றுதல் மாவட்ட மாணவர் கழக செயலாளர் ச.சிந்தனை
19. மருங்குளம் - கொடியேற்றுதல் மாவட்ட பகுதாறிவாளர் கழக செயலாளர் பாவலர் பொன்னரசு.
இந்நிகழ்வில் 25க்கும் மெற்பட்ட இருசக்கர வாகனங்களில் கழக தோழர்கள் உர்சாகத்துடன் கலந்துகொண்டனர். மருங்குளம் அறிவுசுடர் ஆங்கிலப் பள்ளியில் ஊர்வலத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம்
மருத்துவக் கல்லூரி சாலை
உலகத் தலைவர் தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள் விழாவை தஞ்சை மாவட்டம் மருத்துவக் கல்லூரி சாலை சுந்தரம் பெயிண்ட்ஸ் அருகில் எழுச்சியுடன் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது
No comments:
Post a Comment