மத்திய பேருந்து நிலையத்தி லுள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கிய ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில் மேனாள் மாவட்ட செயலாளர் கணேசன், செந்தமிழினியன், மாநகர அமைப் பாளர் கனகராஜ், பெரியார் பெருந்தொண்டர் பொன் யோக ராஜ், யாழினி, அறிவுச்சுடர், வெற்றி, குணசேகரன், சேவியர், அமுதா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் புத்தூர் பெரியார் மாளிகையிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிடன் புத்தக நிலைய பணியாளர்கள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பெரி யார் மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை, நாகம்மையார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செண்பக வள்ளி, பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாக்கிய லட்சுமி, பெரியார் மெட்ரிக் மேனிலைப் பள்ளி முதல்வர் வனிதா, பெரியார் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் விஜய லட்சுமி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப் பட்டது.
சிறீரங்கம்
சிறீரங்கத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு நகரத் தலைவர் கண்ணன் தலைமை யில் மாலை அணிவிக்கப் பட்டது. தேவா கழக கொடியினை ஏற்றிவைத்தார். இதில் மாவட்ட கழக தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், மாவட்ட இளைஞரணி செய லாளர் மகாமணி, மாநகரத் தலைவர் துரைசாமி, சிறீரங்கம் நகரத் தலைவர் முருகன், திரு வெறும்பூர் ஒன்றியத் தலைவர் மாரியப்பன், விஜய்யோ கானந்த், கல்பாக்கம் ராமச்சந்திரன், காட்டூர் சங்கிலிமுத்து, ஆதி, சக்கர வர்த்தி, கவுதமன், தினேஷ், பாண்டியன், முருகானந்தம், அண்ணாதுரை, ராமநாதன், அப்பாசாமி, திருநாவுக்கரசு, பொன்னுசாமி,செல்வம், விடு தலை வாசகர் வட்டத் தலைவர் ஜெயராஜ், செயலாளர் அரிகரன் மற்றும் தி.மு.க. சார்பில் ராம் குமார், காங்கிரஸ் கட்சி சார்பில் ஜவகர், சண்முகம், சி.பி.எம். சார்பில் தர்மு ஆகியோர் கலந்து கொண்டனர்.
காட்டூர்காட்டூரிலுள்ள தந்தை பெரி யார் சிலைக்கு காட்டூர் கிளைக் கழக தலைவர் காம ராஜ் தலை மையில் மகளிர் அணி தோழர் கள் கவுரி, ரூபியா ஆகியோர் மாலை அணிவித்தனர். கழகக் கொடியினை மகளிரணி தோழர் கவுரி ஏற்றி வைத்தார். இந் நிகழ்ச்சியில் கழகத் தோழர்கள் காட்டூர் சங்கிலிமுத்து, கல் பாக்கம் ராமச்சந்திரன், பால சுப்பிரமணியன், ராஜேந்திரன், வெள்ளைக்கண்ணு, ராஜரத் தினம், விஜய்யோகானந்த், திருமதி சிவானந்தம், பெரியார் பிஞ்சுகள் யாழ்கண்மணி,யாழிசை மற்றும் திமுக சார்பில் முத்து, பொய்யாமொழி, குருநாதன், ம.தி.மு.க சார்பில் அன்புராஜ், கென்னடி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சமூகநீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
துவாக்குடிதுவாக்குடி மலையிலுள்ள தந்தை பெரியார் சிலைக் துவாக்குடி நகர திராவிடர் கழகம் சார்பில் நகர தலைவர், விடுதலை கிருஷ்ணன் தலை மையில் திருவெறும்பூர் ஒன்றியத் தலைவர் மாரியப்பன், பெல் அசோக்குமார், பாண்டியராஜ், கிருஷ்ணகுமார் ,தாமஸ்,பஞ்சலிங்கம், செல்வம், விடுதலை கிருஷ்ணன், ரவிச்சந்திரன், திருமூர்த்தி, செங்குட்டுவன், முருகன், தமிழ்கவி, ராம ஜெயம், அன்புலதா, ராமச்சந்திரன், ஜெயக்கொடி, யாழினி, நிகரன், புனிதவதி, காளீஸ்வரி, மைக் கேல், கணேசன், உத்ராபதி, காளியம்மாள், கோகிலா, ரவி -(சிபிஎம்) ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெல் கிழக்கு வாயில்
பெல் நிறுவனத்தில் கிழக்கு வாயிலில் பெல் திராவிடர் கழகம் சார்பில் பொதுச் செய லாளர் ஆ.அசோக்குமார் தலை மையில் பெரியார் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு தொழிற் சங்கங்களின் சேர்ந்தவர்களும் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பொன்மலை
பொன்மலை
பொன்மலை ரயில்வே பணிமனைக்கு முன்பு தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட ப.க தலைவர் மதிவாணன் தலைமையில் பொன்மலை பகுதி தலைவர் ஆட்டோராஜ், வள்ளியம்மை, பொன்மலை பெரியசாமி, மணிமாறன், திமுக மாமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
மேலக்கல்கண்டார்கோட்டைமேலக்கல்கண்டார் கோட்டையிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மருத்துவர் மரகதம், காயத்ரி (எ) கியூபா, புனிதா, பொன்மலை பகுதி செயலாளர் ஆட்டோ இராசு, பழனிவேல், புகழேந்தி, ஜெய பாலன் ஆகியோர் மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment