திருவரங்கம், செப். 2- 31.8.2022. புதன்கிழமை காலை 11:00 மணிக்கு திருவரங்கம் நகர கலந்துரையாடல் கூட்டம் திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கிய ராஜ் தலைமையில் திரு வரங்கம் பெரியார் படிப் பகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் திருவரங் கம் திருவானைக்காவல் பகுதியில் புதிதாக போடப் போகும் இரண்டு கொடி கம்பம் உட்பட மொத்தம் 30 கம்பங்களில் தந்தை பெரியார் பிறந்த நாளில் கொடியேற்றுவது என வும் திருவரங்கம் தந்தை பெரியார் சிலைக்கு காலை 8.30.மணிக்கு மாலை அணி வித்து அங்கு குழுமியுள்ள பொது மக்களுக்கு இனிப்பு வழங்குவது எனவும் திரு வரங்கம், திருவானைக் காவல், பகுதியில் கொடி யேற்றி முடித்ததும் பெரியார் படிப்பகம் வந்தடைந்து அங்கு தோழர்களுக்கு மதியம் புலால் உணவு வழங்குவது எனவும் தீர் மானிக்கப்படுகிறது.
அத்துடன் திருவரங் கம் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அனைத்து தோழர்களும் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு 9:30க்குள் வந்து சேரும்படியும் தீர்மானிக் கப்படுகிறது கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விடுதலை வாசகர் வட்ட தலைவர் ஜெயராஜ், திரு வரங்க நகர தலைவர் ச.கண்ணன், திருவரங்க நகர செயலாளர் இரா. முருகன், பெரியார் படிப்பக திருநாவுக்கரசு, பொன்னுசாமி. செல்வம். காட்டூர் சி. கனகராசு. தோழர்கள் கலந்துரை யாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர் சிறப்பாக பெரியார் பிறந்த நாளை கொண்டாடுவது என வும் தீர்மானிக்கப்பட்டு முடிவுற்றது.
No comments:
Post a Comment