அக். 14-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

அக். 14-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு

சென்னை,செப்.24- இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள், இடைநிலை ஆசிரியராகவும், 2-ஆம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பாணை கடந்த மார்ச் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதல் தாளுக்கு 2 லட்சத்து 30,878 பேரும், 2-ஆம்‌ தாளுக்கு 4 லட்சத்து 1,886 பேரும்‌ விண்ணப்பித்தனர்‌. மேலும், இந்த ஆண்டு டெட் தேர்வை இருகட்டங்களாக நடத்தவும் முடிவா னது. அதன்படி முதல் தாளுக்கான தேர்வை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடத்த திட்ட மிடப்பட்டு பின்னர் நிர்வாக காரணங்களால் தள்ளிவைக்கப்பட் டது. இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு (முதல் தாள்) அக்டோபர் 14 முதல் 20-ஆம் தேதி வரை இருவேளைகளில் கணினி வழியில் நடத்தப்பட உள்ளதாக டிஆர்பி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


No comments:

Post a Comment