ஜெனீவா, செப்.10 மனித வளர்ச்சிக் குறியீடு (HDI) தொடர்பான பன்னாட்டு பட்டியலை அய்க்கிய நாடுகள் மேம்பாட்டு திட்ட அமைப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 191 நாடுகள் அடங்கிய இந்தப் பட்டியலில் இந்தியா மிக மோசமாக 132ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது 2021ஆம் ஆண்டுக்கான பட்டியலாகும். 2020ஆம் ஆண்டில் கூட இப்பட்டி யலில் இந்தியா 130ஆவது இடத் தில் இருந்தது.
ஆனால் இப்போது மேலும் இரண்டு இடங்கள் சறுக்கி 132ஆம் இடத்துக்குத் தள்ளப்பட் டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடு களான இலங்கை 73ஆம் இடத்திலும், சீனா 79ஆம் இடத் திலும், பூட்டான் 127ஆம் இடத்தி லும், நேபாளம் 143ஆம் இடத்தி லும், பாகிஸ்தான் 161ஆம் இடத்தி லும் உள்ளன. இலங்கை, பூட்டான் ஆகிய நாடுகளை விட இந்தியா பட்டியலில் பின்தங்கியிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.
மனித வளர்ச்சிக் குறியீடு என்பது நான்கு காரணிகளின் அடிப்படையில் கணக்கிடப்படு கிறது. பிறக்கும்போது அக்குழந்தை யின் எதிர்கால வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்பு, பள்ளிப் பருவம், தனிநபர் தேசிய வருமானம் ஆகிய வற்றின் அடிப்படையில்தான் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்டு வருகிறது.இந்தியாவில் போதிய அளவில் கல்விச் சேவை கிடைப்பதில்லை என்பதையும், தனிநபர் வருவாய் போதுமானதாக இல்லை என்பதையுமே இந்தப் பட்டியல் காட்டுகிறது. இதில் முன்னேறிச் செல்ல இந்திய அரசுக்கு கடுமையான சவால்கள் உள்ளன. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமாகக் கொண்ட நாடுகளில் இது மிகப் பெரிய சவால்தான்
No comments:
Post a Comment