புதுதில்லி, செப். 12- ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள், நாட்டையே நாசப்படுத் தும் பொருளாதாரக் கொள் கைகள் காரண மாக 2021-ஆம் ஆண்டில் 1,18,979 ஆண்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.
இவர்களில் தினசரி ஊதியம் பெற்று வந்தவர் கள் 37,751 பேர், சுய தொழில் செய்தவர்கள் 18,803, வேலையில்லாத வர்கள் 11,724. சரியாக குறிப்பிடுவதென்றால் 2021-ஆம் ஆண்டில் தின சரி 115 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறைந்த பட்ச ஊதியம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 2021-ஆம் ஆண்டு 5,318 விவசாயிகள், 5,563 விவசாயத் தொழிலாளர் கள் என விவசாயத்துறை சார்ந்து 10,881 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும்பான்மையோர் ஆண்கள். இது இந்தியா வில் தற்கொலை செய்து கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 6.6 சத வீதம் ஆகும். விவ சாயத் துறையில் ஈடுபட்டு ள்ளவர்களின் தற்கொலை யில் மகாராஷ்டிராவில் (37.3 சதவீதம்), அதைத் தொடர்ந்து கர்நாடகா (19.9 சதவீதம்), ஆந்திரப் பிரதேசம் (9.8 சத வீதம்), மத்தியப் பிரதேசம் (6.2 சதவீதம்), தமிழ்நாடு (5.5 சதவீதம்) ஆகிய மாநிலங் கள் பிரதான இடத்தில் உள்ளன. இந்தத் தகவல் களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment