கிருட்டினகிரி மாவட்டம் பெரியார் 1000 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

கிருட்டினகிரி மாவட்டம் பெரியார் 1000

கிருட்டினகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் ஆயிரம் வினா விடை போட்டி தேர்வு (29.8.2022) பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழக கிருட்டினகிரி  மாவட்ட செயலாளர் கா. மாணிக்கம் பள்ளி மாணவிகளிடையே தந்தை பெரியார் குறித்தும், தந்தை பெரியார்  பெண் உரிமைக்காக எவ்வாறு பாடுபட்டார் என்பதை எடுத்துக் கூறியும் பெரியார் ஆயிரம் தேர்வு முறைகள் பற்றி எடுத்துக் கூறியும் தேர்வை துவக்கி வைத்தார். பள்ளி தமிழ் ஆசிரியர்கள்  கிரேசிராணி, அம்பிகா ,செல்வி, ஆகியோர் தேர்வு கண்காணிப் பாளர்களாக இருந்து தேர்வை ஒருங்கிணைத்து நடத்தினர். பெரியார் ஆயிரம் தேர்வு சிறப்பாக நடத்திட ஒத்துழைத்த பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்  கா.மாணிக்கம் அனைவருக்கும் "பெண் ஏன் அடிமை யானாள்" என்ற புத்தகம் வழங்கினார்.  மொத்தம் பள்ளியில் 500 மாணவிகள் பெரியார் 1000 தேர்வை ஆர்வமுடன் எழுதினார்கள்.


No comments:

Post a Comment