காரைக்குடி கழக மாவட்டத்தில் பெரியார் 1000 வினா-விடை தேர்வு நடைபெற்ற 21 பள்ளிகளுக்கும் சட்டமிடப்பட்ட பெரியார் படம் வழங்கப்பட்டது. நிகழ்வில் திராவிட மாணவர் கழக மண்டல செயலாளர் அ.பிரவீன் முத்துவேல், பகுத்தறிவாளர் கழகத் தோழர் சிவ.தில்லை ராசா பங்கேற்றனர்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் ,கல்லூர், சரஸ்வதி அறிவாலயம் மேல்நிலைப்பள்ளியில் 135 மாணவர்கள் பங்கேற்ற பெரியார் 1000 வினா-விடை போட்டி பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் தேர்வாளர் செ.கலைச்செல்வன், ஒருங்கிணைப்பாளர் அ.பன்னீர்செல்வம், ப.செல்வபாரதி, த.மீனா மற்றும் ஆசிரியர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது. (26/08/2022)
No comments:
Post a Comment