தாம்பரம், செப். 3-- 22.8.2022 அன்று பெரியார் 1000 வினா-விடை தேர்வு தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மேற்கு தாம்பரம் காந்தி சாலை M.C.C.R.S.L உயர்நிலைப்பள்ளி யில் நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரி யர் மற்றும் ஆசிரியப் பெரு மக் கள் முழு ஒத்துழைப்பு வழங்கி தேர்வை சிறப்பாக நடத்தி முடித்து கொடுத்தனர்.
தாம்பரம் மாவட்ட திராவி டர் கழக மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன்,தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், தாம்பரம் நகர துணைச் செய லாளர் மா.குணசேகரன், படப்பை சந்திரசேகரன் மற்றும் பெரியார் உயராய்வு மய்ய செயல்வீரர் தியாகராஜன் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியப் பெரு மக்களுக்கு நன்றி கூறி சிறப்பித்தனர்
22.8.2022 அன்று பெரியார் 1000 வினா-விடை தேர்வு தாம் பரம் பேபி உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
பள்ளி தாளாளர் கி.கஜேந்தி ரன் அனுமதியுடன் பள்ளித் தலைமை ஆசிரியர் வெ.கல்பனா பள்ளி பிள்ளைகளிடம் தான் பெரியார் மணியம்மை கல்லூரி யில் ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியர் ஆனதை பற்றியும் பெரியார் ஒருவர் தான் பெண் களுக்காக தன் வாழ்நாள் பாடு பட்டார் என்று பெருமையுடன் உரையாற்றினார். தாளாளரின் மகள் க.வைஷ்ணவி முழு ஒத்து ழைப்பு வழங்கினார். ஆசிரியை கோ.வித்யாலட்சுமி அவர்கள் தேர்வை ஒருங்கிணைத்தார். ஆசிரியை மோ.சுமதி தேர்வை மேற்பார்வையிட்டு சிறப்பாக செயல்பட்டு தேர்வை முடித்துக் கொடுத்தார்கள். பெரியார் பெருந் தொண்டர் சபாபதி பள்ளி பிள் ளைகளிடம் தந்தை பெரியார் அவர்களின் தொண்டை விளக் கினார்.
தாம்பரம் மாவட்ட திரா விடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் ப.முத்தையன், மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக மகளிரணி தலைவர் ப.உத்ரா, மாவட்ட இளைஞரணி செயலா ளர் கரைமா நகர் தே.சுரேஷ் பெரியார் உயராய்வு மய்ய செயல் வீரர் தியாகராஜன் மற்றும் தாம் பரம் நகர செயலாளர் சு.மோகன் ராஜ் ஆகியோர் பள்ளி தாளா ளர் மற்றும் ஆசிரிய பெரு மக்க ளுக்கு நன்றி கூறி தேர்வை சிறப் பாக செயல்பட்டு சிறப்பித்தனர்.
22.8.2022 அன்று பெரியார் 1000 வினா--விடை தேர்வு தாம்ப ரம் மாவட்ட திராவிடர் கழக சார்பில் மேற்கு தாம்பரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரி யர் மற்றும் ஆசிரிய பெரு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி தேர்வை சிறப்பாக நடத்தி முடித்து கொடுத்தனர்.
தாம்பரம் மாவட்ட திரா விடர் கழகம் மாவட்ட செயலா ளர் கோ.நாத்திகன்,தாம்பரம் மாவட்ட இளைஞரணி செயலா ளர் கரைமா நகர், தே சுரேஷ், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், மற்றும் பெரியார் உயராய்வு மய்ய செயல்வீரர் தியாகராஜன் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெரு மக்களுக்கு நன்றி கூறி சிறப்பித்தனர்.
22.8.2022 அன்று பெரியார் 1000 வினா-விடை தேர்வு தாம் பரம் மாவட்ட திராவிடர் கழக சார்பில் கரசங்கால் பெரியார் சமத்துவபுரம் துண்டல்கழனி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரி யர் மற்றும் ஆசிரிய பெரு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி தேர்வை சிறப்பாக நடத்தி முடித்து கொடுத்தனர்.
சென்னை மண்டல கழக தலைவர் தி.இரா.இரத்தினசாமி தலைமையில் தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், தாம் பரம் நகர செயலாளர் சு.மோகன் ராஜ்,மண்ணிவாக்கம் மகளிரணி தோழர் அருணா, கரசங்கால் கதிர்வேல் மற்றும் நடராஜன் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெரு மக்களுக்கு நன்றி கூறி சிறப் பித்தனர்.
No comments:
Post a Comment