காஞ்சிபுரத்தில் பெரியார் 1000 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 2, 2022

காஞ்சிபுரத்தில் பெரியார் 1000

காஞ்சிபுரம், செப். 2- காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரியார் 1000 வினா - விடை போட்டியில்- 500 மாணவர்கள் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் மாவட் டத்தில் பெரியார் 1000 வினா - விடை போட்டிகள் 27.08.2022 அன்று காலை நடைபெற்றன.

காலை 9.30 மணிக்கு போட்டி தொடக்க விழா நடைபெற்றது. தேர்வு 10.15 மணிக்குத் தொடங்கி 11.00 மணிக்கு முடிவ டைந்தது.  500 மாணவர் கள் போட்டியில் பங்கேற் றனர்.

1. காஞ்சிபுரம் பச் சையப்பன் மேல்நிலைப் பள்ளியில், காஞ்சி மண் டல திராவிடர் கழகச் செயலாளர் முனைவர் காஞ்சி பா. கதிரவன் ஒருங்கிணைப்பில், காஞ்சிபுரம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் திரா விட முன்னேற்றக் கழகத் தின் மாணவர் கழகச் செயலாளருமான வழக்கு ரைஞர் சி.வி.எம்.பி. எழில ரசன் போட்டியைத் தொடங்கி வைத்தார். 152 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். மாமன்ற உறுப்பினர் பா. பிரவீண் குமார், பள்ளி தலைமை ஆசிரியர் ஜி. குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் செ.ரா. முகிலன், பொறியாளர் உ.க. அறிவரசி, பொறியா ளர் பா. அருண் குமார், பொறியாளர் கு. அர விந்தன் ஆகியோர் ஒருங் கிணைப்பாளருடன் இணைந்து தேர்வு மேற் பார்வை பணிசெய்தனர். 

2. காஞ்சிபுரத்தில் உள்ள ஆற்காடு நாராய ணசாமி மகளிர் மேல் நிலைப்பள்ளியில், காஞ்சி ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் அ.வெ. முரளி ஒருங்கிணைப்பில், காஞ்சிபுரம் மாநகராட்சி யின் மேயர் மகாலட்சுமி யுவராஜ் போட்டியைத் தொடங்கி வைத்தார்.  153 மாணவிகள் தேர்வில் பங் கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரி யர்கள் விழாவில் பங் கேற்றனர். ஒருங்கிணைப் பாளருடன் காஞ்சி மாநகர திராவிடர் கழகச் செயலாளர் ச. வேலாயு தம், மருத்துவர் ஆறுமு கம், மருத்துவர் குழலரசி, மருத்துவர் சத்தியபிரியா, எழிலரசி, உமாமகேஸ்வரி ஆகியோர் தேர்வு மேற் பார்வை பணிசெய்தனர்.

ராணி அண்ணாதுரை பள்ளி மாணவர்கள் 17 பேர் தேர்வு எழுதினர். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரி யர்கள் விழாவில் பங்கேற் றனர். 

3. வாலாஜாபாத் அகத் தியா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட திராவிடர் கழ கச் செயலாளர் இ.இர வீந்திரன், வாலாஜாபாத் ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் ஆ. மோகன் ஆகியோர் ஒருங்கிணைப் பில், வாலாஜாபாத் ஒன் றியக்குழு தலைவர் ஆர்.கே.தேவேந்திரன் போட்டியைத் தொடங்கி வைத்தார். பள்ளி தாளா ளர் அஜய் குமார், செய லாளர் சாந்தி, முதல்வர் தேன்மொழி உள்ளிட் டோர் தொடக்க விழா வில் கலந்து கொண்டனர். 150 மாணவர்கள் தேர் வில் பங்கேற்றனர். இளை ஞரணி பொறுப்பாளர் தம்மனூர் மு. அருண் குமார், தன்னார்வலர்கள் குமார், இளங்கோவன் ஆகியோர் ஒருங்கிணைப் பாளர்களுடன் இணைந்து தேர்வு மேற்பார்வை பணி செய்தனர்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட பெரியார் 1000 தேர்வு ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் உதயசங்கர்,  மாமன்ற உறுப்பினர்கள், ஊரக உள்ளாட்சிப் பிர திநிதிகள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர் கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்று தேர்வு நடத்த உறுதுணையாக இருந்த னர்.

தேர்வு எழுதிய அனைவருக்கும் காஞ்சிபுரம் மாமன்ற உறுப் பினர் பா. பிரவீன் குமார் பிஸ்கெட் பாக்கெட் மற் றும் தண்ணீர் பாட்டில் வழங்கினார்.

No comments:

Post a Comment