மேட்டூர், செப். 1- மேட்டூர்கழக மாவட் டத்தில் 29 8 2022 மற்றும் 30 8 2022 ஆகிய இரண்டு நாட்கள் பெரியார் ஆயிரம் வினா விடை போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
29. 8. 2022 அன்று இடைப்பாடி பகுதியில் தேர்வு நடைபெற்றது. இதில் மேட்டூர் மாவட்ட கழக செயலாளர் க.நா.பாலு மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி.அன்புமதி மற்றும் தஞ்£வூர் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முனைவர் என். லெனின் உதவி பேராசிரியர் மற்றும் எஸ் சாமுண்டிராஜ் உதவி பேராசிரியர் ஆகியோர் தேர்வை சிறப்பாக நடத்தினர்.
தேர்வில் அரசு மேல்நிலைப் பள்ளி அரசு செட்டிபட்டி- 38 அரசு மேல்நிலைப்பள்ளி தேவூர்-49 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இடைப்பாடி-50 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கைகோல்பாளை யம் -35 பிருந்தாவனம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி- 54 அரசு மேல்நிலைப்பள்ளி இடைப்பாடி- 38 ஆகிய பள்ளிகளிலிருந்து மாண வர்கள் தேர்வில் கலந்து கொண் டனர்.
30.8.2022 அன்று ஓமலூர் பகுதியில் தேர்வு நடைபெற்றது. இதில் சவுத் இந்தியன் மெட்ரிக் பள்ளி பஞ்சுகாளிப்பட்டியில் திரா விடர் கழக பொதுக்குழு உறுப்பி னர் பழனி.புள்ளையன்ணன் தந்தை பெரியாரின் கருத்துகளை எடுத்துக் கூறி தேர்வை முறைப்படி தொடங்கி வைத்தார்.
பள்ளியின் தாளாளர் என்.சவுந் திரராஜன் அனைவரையும் வர வேற்றார். சேலம் மண்டல திரா விடர் கழகத் தலைவர் சிந்தாமணி யூர் சி.சுப்பிரமணியன், மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் ஓமலூர்.சவுந்தரராஜன், மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி.அன்புமதி மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் சி மதியழகன், பகுத் தறிவு ஆசிரியர் அணி செயலாளர் வேல்முருகன், அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராமச்சந்திரன் மேட்டூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் கலை வாணன் ஆகியோர் ஒருங்கிணைப் பாளர்களாக இருந்து தேர்வை சிறப்பாக நடத்தி முடித்தனர்.
இதில் பல்கலைக்கழக ஒருங் கிணைப்பாளர்கள் முனைவர் என். லெனின் உதவிப் பேராசிரியர் மற்றும் எஸ். சாமுண்டிராஜ் உதவி பேராசிரியர் ஆகியோர் தேர்வை சிறப்பாக நடத்தினர்.
இத்தேர்வில் சவுத்இந்தியன் மெட்ரிக் பள்ளி பஞ்சுகாளிப்பட்டி- 266, அரசு மேல்நிலைப்பள்ளி சிந் தாமணியூர்- 87 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செம்மாண்டப் பட்டி 25 அரசு மேல்நிலைப்பள்ளி கருப்பூர்- 67 பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி ஓமலூர் -91 வேலாசாமி செட்டியார் மேல் நிலைப்பள்ளி ஓமலூர்- 26 அரசு உயர்நிலைப்பள்ளி மூக்கனூர்- 44 அரசு மேல்நிலைப்பள்ளி தாரா புரம் -148 அரசு மேல்நிலைப்பள்ளி கஞ்சநாயக்கன்பட்டி-154 அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தாரா புரம் -48 ஆகிய பள்ளிகளிலிருந்து மாணவர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். இரண்டு நாள்களும் சேர்ந்து மேட்டூர் மாவட்டத்தில் 1220 மாணவர்கள் தேர்வைச் சிறப்பாக எழுதினர்.
No comments:
Post a Comment