புதுடில்லி, ஆக.25 காங்கிரஸ் கட்சியின் நடைப்பயணத்திற் கான இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைப்பயணம் செல்ல உள்ளார். 'இந்தியா அனை வருக்குமான நாடு' என்ற கோட்பாட்டை விளக்கி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல்காந்தி செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைப்பயணம் செல்ல உள்ளார். 150 நாள்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் செப்டம்பர் 7 ஆம் தேதி நடக்கிறது. இந்த நடைப்பயணத்திற்கான முன்னேற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். நடை பயணத்தை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாகவும், கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது தொடர் பாகவும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் டில்லியில் நேற்று (23.8.2022) நடை பெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் நடை பயணத்திற்கான லோகோ (இலட்சினை), அடையாள முழக்கம், தீம் பாடல் ஆகியவற்றை காங்கிரஸ் நிர்வாகிகள் வெளியிட்டனர். மேலும் இது தொடர்பாக இணைய தளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித் துள்ளனர்.
No comments:
Post a Comment