ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரையே யாருக்கு உபயோகப் படுத்தலாமென்றால், முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப்படுத்த லாம். ஏனெனில், நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களே யாவார்கள். அக்குழந்தைகளுக்கு 6,7 வயது வரையிலும் தாய்மார்களே தாம் உபாத்தியாயர்களாக இருக்கிறார்கள்.
('குடிஅரசு' 1.5.1927)
No comments:
Post a Comment