இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 7, 2022

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு

தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகீதன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அ.மு.சலீம், தோழர் சி.மகேந்திரன். திருப்பூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது மாநில மாநாடு - சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பங்கேற்று உரையாற்றினார். அவருக்கு விழாக் குழுவின் சார்பில் ஏலக்காய் மாலை, பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. (6.8.2022).


No comments:

Post a Comment