கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பயிற்சி: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பயிற்சி: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

சென்னை, ஆக. 27- கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க மாவட்டம்தோறும் பயிற்சி மய்யங்கள் அமைக்கப் படும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலை மையில் தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தின் 3ஆவது ஆட்சிமன்றக் குழு கூட்டம் சென்னை தலை மைச் செயலகத்தில் 25.8.2022 அன்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

இதுகுறித்து அமைச்சர் சி.வி. கணேசன் உரையில் குறிப்பிட்ட தாவது,

தமிழ்நாடு கட்டுமானக் கழகம் சீரமைக்கப்படும். அதன் செயல்பாடுகள் சிறப்பாக அமைய, செங்கல்பட்டு மாவட்டம் தையூ ரில் பயிற்சி நிலையம் அமைப் பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும். கட்டுமா னத் தொழிலாளர் நல வாரியத் தில் பதிவு செய்த தொழிலாளர் களுக்கு மறு பயிற்சி அளித்தல், குறுகிய கால பயிற்சி வழங்குதல், பயிற்சி வடிவமைப்பு, சான்றிதழ் வழங்குதல், வேலைவாய்ப்பு குறித்து முடிவுகள் எடுக்கப்படும்.

கட்டுமானக் கழகத்தை சரி யான முறையில் நடத்த, தொழி லாளர் துறையில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் உடனடி யாக தொழிலாளர்களை சென் றடையும் வகையில் விளம்பரம் செய்யப்பட வேண்டும். கட்டு மானத் தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்க  கட்டுமானக் கழகம் மூலம் மாவட்டம்தோறும் பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்தப் படும்.

குறிப்பிட்ட தொழிலில் மட் டுமின்றி, பல்வேறு தொழில்க ளில் பயிற்சி அளித்து, அவர்களது தொழில் திறன் மேம்படுத்தப் படும். குறைந்த கால பயிற்சியாக இல்லாமல், 90 நாட்களுக்கு மிகாமல் பயிற்சி அளித்து, செய் முறைத் தேர்வு வைத்து, அதன் பிறகு சான்றிதழ் வழங்கப்படும். கட்டுமானக் கழகம் மூலம் பயிற்சி பெறும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, அவர்க ளது வாழ்வாதாரம் பாதிக்கப் படாத வகையில் தகுந்த ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.

-இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment