மேற்கண்ட சொற்றொடர், ஒரு மரபுச் சொல், ஒரு சொலவடை; ஒரு பழக்கச் சொல். தமிழ்நாட்டு வாழ்வுச் சொல்.
‘விடுதலை’ நாளேட்டைப் படிக்க தனிக் கவனம் தேவை. அது மக்கள் விரும்புவதைக் கொடுக்கும் நாளேடு அல்ல; மக்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் நாளேடு. அதில் வரும் ஆசிரியரின் அறிக்கைகள் தமிழ் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லும். அவை யாவும் தொகுத்துப் பாதுகாக்கப்பட வேண் டியவை.
“வாழ்வியல் சிந்தனைகள்’’ என்றைக் கும் தேவைப்படும் அறிவுரை ஆகும்.
ஒற்றைப் பத்தி, செய்தியும் சிந்த னையும், ஞாயிறு மலர், தலையங்கம், அறிவியல் அரங்கம், பகுத்தறிவுக் களஞ்சியம், வரலாற்றுச் சுவடுகள், மருத்துவத் தகவல்கள் ஆகியவை மக்களுக்கு அறிவு விளக்கம் தருபவை.
தமிழ்நாட்டு மக்களுக்குப் பாடு பட்டவர்களின் பிறந்த - நினைவு நாள்களில் அவர்களின் படத்தினை வெளியிட்டு, குட்டிச் செய்தியைத் தரும் நாளேடு.
இதனால் மாணவர்கள், இளை ஞர்கள் தங்களுக்காகப் பாடுபட்ட அந்த முன்னோர்களைப் பற்றி அறிய உதவும் நாளேடு.
பார்ப்பன ஊடகங்கள் இட்டுக்கட்டும் செய்திகள், பொய்ச் செய்திகளுக்கு அடிக்கடி பதிலடி கொடுப்பது மக்களின் சிந்தனையைத் தூண்டுவதோடு பார்ப்பன ஆரியத்தின் கொட்டத்தையும் அடக்குவதாகும்.
அரசியல் தலைவர்களின் சொற் பொழிவுகளை முழுவதுமாக வெளி யிட்டு மக்களை அறிவுபூர்வமாகச் சிந்திக்கச் செய்யும் நாளேடு.
இதனால் மாணவர்கள், இளை ஞர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் அனைவரும் அறிவுப்பூர்வமாகப் பயன் அடைகின்றனர்.
வாழ்க விடுதலை! வளர்க விடுதலைப் பணி!!
- நடேசன் கைலாசம்,
‘விடுதலை’, ‘உண்மை’,
‘மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ வாசகர்
No comments:
Post a Comment