சென்னை, ஆக. 20- ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழ்நாடு அரசும், காவல்துறை தலைமை இயக்குநரும் எடுத்துள்ள நடவடிக்கைகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப் பிரமணியம் பாராட்டி உள்ளார். உயர் அதிகாரி களின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை போன்ற விவகாரங்கள் குறித்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து வருகிறார்.
காவல்துறை உயர் அதிகாரிகள் ஆர்டர்லி களை வைத்திருக்கக் கூடாது என்கிற உள் துறை முதன்மை செயலாளரின் உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆர்டர்லி விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பெரும் பாலான ஆர்டர்லிகளை திரும்பப் பெற்றுள்ள தாகவும், மாற்று ஏற்பாடு செய்தவுடன் மற்றவர் களும் திரும்பப் பெறப்படுவார்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை பணி தவிர, தனிப்பட்ட பணிகளுக்காக ஆர்டர்லியை பயன்படுத்த மாட்டோம் என அனைத்து அய்.பி.எஸ் அதிகாரிகளும் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழ்நாடு அரசும், காவல்துறை தலைமை இயக்குநருக் கும் எடுத்துள்ள நடவடிக்கைகளை பாராட் டுவதாகத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment