சென்னை,ஆக.30- பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட் டம் அதிகரித்துள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆராய்ச்சித் துறையின் தலைவரும் மேனாள் மாநிலங்களவை உறுப்பினருமான ராஜீவ் கவுடா கூறினார்
சென்னை சத்திய மூர்த்திபவனில் நேற்று (29.8.2022) அவர் செய்தியா ளர்களிடம் கூறியது: இந்தி யாவில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத் துக்கு ஒன்றிய பாஜக அரசின் தவறான பொரு ளாதாரக் கொள்கைகளே காரணம். 2014-இல் ஆட் சிக்கு வந்ததிலிருந்து விலை வாசி உயர்வைக் கட்டுப் படுத்த மோடி தவறிவிட் டார். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பணமதிப்பிழப்பு மற்றும் அவசர ஜிஎஸ்டி என ஏற் கெனவே பொருளாதாரத் தின் அடித்தளத்தையே சிதைத்துவிட்டார்கள்.
2022 ஆகஸ்ட் 5-இல் விலைவாசி உயர்வுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தப் பட்டது. 2022 செப்டம்பர் 4-இல் விலைவாசி உயர் வைப் பேசுவோம் என்ற பேரணி டில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளது என்றார்.
No comments:
Post a Comment