வகுப்புக்கலவரத்துக்கு வித்திடும் காவிக்கும்பலின் சூழ்ச்சி அனைத்துக்கட்சியினரால் முறியடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 15, 2022

வகுப்புக்கலவரத்துக்கு வித்திடும் காவிக்கும்பலின் சூழ்ச்சி அனைத்துக்கட்சியினரால் முறியடிப்பு


தேனி, ஆக. 15- 13.8.2022 அன்று  அனுதியில்லாமல் தேனி நகரின் முக்கிய வீதிகளில் திருட்டுத் தன மாக  ஆர்.எஸ்.எஸ்.சின் காவிக் கொடி நள்ளிரவில் ஏற்றப்பட் டது. சூரியனின் உதயத்திற்கு பிறகு சூடுபிடிக்க தொடங்கியது  திராவிடர் கழத்தின் சார்பில் வெகுண்டெழுந்த பெரியாரிய உணர்வாளர்களின் கூட்ட மைப்பை சார்ந்த தோழமைக் கட்சிகளின் போராட்ட முன் னெடுப்பால்   காவிக் கம்பத்தில் இருந்த ஆர்.எஸ்.எஸ்.சின் காவிக் கொடியை அறுத்து காவிக் கம் பத்திலே கண்ணிமைக்கும் நேரத் தில் தேசியகொடியை  ஏற்றிய காவி கும்பல் தாங்கள் சவார்க்கர் பரம்பரை என்பதை நிரூபிக்கும் விதமாக அரை நொடியில் அந்தர் பல்டி அடித்ததை கண்டு மக்கள் எள்ளி நகையாடினர். 

காவிக்கம்பத்தில் தேசியகொடியா?

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளான நிலையில் இந்திய சுதந்திர தின விழாவை சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் பெரியாரிய உணர்வார் கள் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது - அதை சீர்குலைக்கும் வகையில் தேனி நகரில் இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னணி சார்பில் கொடி மரங்களை ஆங்காங்கே அமைத்து, அனுமதி இல்லாமல் காவிக்கொடி ஏற்றப் பட்டுள்ளது. 

இதனால் தேனி நகரில் சட் டம் ஒழுங்கு சீர்குலையும் என்பதால் உடனே அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட இந்து அமைப் புகளின் கொடிமரங்களை அகற் றிட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக காவல் துறை துணை கண்காணிப் பாளரிடம் மனு கொடுக்கப்பட் டது.

திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் பூ.மணி கண்டன் ஜெய்பீம் புரட்சிப்புலி கள் அமைப்பின் மாநில தலை வர் க.அருந்தமிழரசு, பா.பிரபாகரன், பொதுச்செயலாளர், பிஷப்.சம்மட்டி நாகராஜன் தமி ழக கிறிஸ்தவ மக்கள் பேரமைப்பு தலைவர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் செல்லத் தம்பி, மரக்கடை செல்வராசு, நகரநிர்வாகிகள் பரஞ்சோதி, வெற்றி, வீரதெய்வம் ஆகியோர் இணைந்து மனு அளித்தனர்.

No comments:

Post a Comment