பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கான பதவிகள் நிரப்பப்படாதது ஏன்? ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 25, 2022

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கான பதவிகள் நிரப்பப்படாதது ஏன்? ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை, ஆக. 25- தேசிய பிற்படுத்தப் பட்டோர் நல ஆணையத்தில் 6 மாதங்களுக்கு மேலாக காலியாக உள்ள தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை நிரப்பக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்குரை ஞர்களுக்கான சமூகநீதிப் பேரவை தலைவர் வழக்குரைஞர் கே.பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவி கள் கடந்த பிப்ரவரி மாதத்துடன் காலாவதியாகி விட்டது.

கடந்த 6 மாதங்களாக ஆணை யத்தின் தலைவர், துணைத் தலை வர் உள்ளிட்ட பதவிகள் காலியாக உள்ளதால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் பல்வேறு பிரச் சினைகளுக்கு தீர்வு காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்ட ரீதியாக தகுதி பெற்றுள்ள தேசிய பிற்படுத் தப்பட்டோர் நல ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற் றும் உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு உத்தர விட வேண்டும்.

மேலும், தேசிய பிற்படுத்தப்பட் டோர் நல ஆணையத்தின் கட்டுப் பாட்டில் மாநிலங்களிலும் பிற் படுத்தப்பட்டோர் நல ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலு வையில் உள்ளதால், மாநில அள வில் அல்லது மண்டல அளவில் ஆணையங்களை அமைக்க உத்தர விட வேண்டும். -இவ்வாறு மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

பின்னர், இதுதொடர்பாக ஒன் றிய அரசு 6 வாரங்களில் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசா ரணையை தள்ளி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment