பெண் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளுக்கும் உண்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 23, 2022

பெண் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளுக்கும் உண்டு

“தற்போது பொருளாதாரத்தை மய்யப் படுத்தித்தான் நமது வாழ்க்கை நகருகிறது. கிராமங்கள், நகரங்களில் வசிக்கும் நடுத்தர, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங் களில் உள்ள கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது கட்டாயம்.

எனவே, குழந்தைகளை வளர்ப்பதில் முழு நேரத்தையும் செலவிட அவர்களால் முடிவதில்லை. இதனாலும் குழந்தைகள் தங்கள் விருப்பம்போல இருக்கவும், அடுத்த வர்களின் சீண்டல்களுக்கு ஆளாகவும் நேரிடுகிறது. இணையதளம், சமூகவலை தளங்களில் வரும் ஆபத்து நிறைந்த நிகழ்ச்சி கள், தவறான பாதைக்குள் தள்ளும் தகவல் கள், இளைய சமுதாயத்தின் உணர்வுகளை தூண்டும் வகையில் காட்சிப்படுத்தப்படு கின்றன. வாட்ஸ்அப், முகநூலில் வரும் அபாய தகவல்கள் எளிதாக மாணவிகளின் மனதுக்குள்ளும் ஊடுருவி பாழ்படுத்து கின்றன.

குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் பேசிப் பழகினால் அதை காவல்துறையினர் கண்டு பிடிப்பது கடினமானது. இதில் பழகிய 14 வயது சிறுமியும், 19 வயது இளைஞரும் சென் னைக்குச் சென்றனர். அங்கு ஒருவரிடம் சிக்கிய சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிகழ்வு வெளிவந்துள்ளது. இதற்கு யார் காரணம்? சிறுமியின் அறியாமை என் பதா அல்லது சமூகவலைதள மோகம் என் பதா? பல்வேறு பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளில் சிக்கும் மாணவிகளுக்கு கலந் தாய்வு அளிக்கிறோம். அவ்வாறான நேரங் களில் அவர்களுடன் உரையாடும்போது, தங்களிடம் பழகியவர்களை அவர்கள் விட்டுக் கொடுப் பதே இல்லை.

இதற்கு அவர்களின் வீட்டில் உள்ள வர்கள், இதுபோன்ற நிலையில் இருக்கும் மாணவிகளிடம் போதிய அன்பு காட்டுவ தில்லை என்ற காரணத்தை அறிய முடிகிறது. எனவே பெற்றோர், தங்களின் பிள்ளை களிடம் இணக்கமாக இருந்தால்தான், இது போன்ற தவறுகள் தவிர்க்கப்படும். பள்ளி களில் முன்பைப்போல மாணவர்களைக் கண்டிக்க முடிவதில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

மாணவ-மாணவிகள் பாலியல் சம்பந்த மான பிரச்சினைகளில் சிக்கினால், மீண்டும் அந்தப் பள்ளியில் அவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை. உடனடியாக நீக்கப்படு கின்றனர். தெரிந்தோ, தெரியாமலோ இது போன்ற நிகழ்வுகளில் சிக்கிய அவர்களை அந்தப் பள்ளியே நிராகரித்தால் அவர்கள் எங்கே போவார்கள்? இளம் சமுதாயத்தின ருக்கு சரியான வழியைக் காட்ட வேண்டு மானால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்பம் என அனைத்தையும் மாற்றுப்பாதைக்கு கொண்டு செல்வது அவ சியம். ஒழுக்கத்தையும், நல்ல சிந்தனைக ளையும் இளைய சமுதாயத்திற்கு கற்றுத் தருவதற்கான கோட்பாடுகளை செயல்படுத் துவது அரசின் கடமை. இதை பள்ளிகளின் வாயிலாகத்தான் நிறைவேற்ற முடியும்”

No comments:

Post a Comment