நீட், ஜேஇஇ தேர்வுகள் கியூட்டுடன் இணைக்கப்படுமாம்! ஒன்றிய அமைச்சர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 15, 2022

நீட், ஜேஇஇ தேர்வுகள் கியூட்டுடன் இணைக்கப்படுமாம்! ஒன்றிய அமைச்சர் தகவல்

 புதுடில்லி, ஆக.15 இந்தியாவில் மருத்துவ படிப்புக்களை படிப்பதற்கு நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. அதே போல்  பொறியியல் படிப்புகளுக்கு  ஜேஇஇ  நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது இரண்டு நுழைவுத்தேர்வுகளையும் ஒன்றாக நடத்த  ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது. அதே போல் என்.அய்.டி. மற்றும் அய்.அய்.அய்.டி.களி லும், குறிப்பிப்பிட்ட சில தொழில்நுட்ப நிறுவனங்களிலும் சேர்வதற்கு ஜே.இ.இ. மெயின் தேர்வுகள்  நடத்தப்பட்டு வருகிறது.  நீட், ஜே.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வுகளை 'கியூட்' என்று அழைக்கப்படுகிற பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வுடன்  இணைப்பதற்கான வாய்ப்புகளை ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து பல் கலைக்கழக மானியக்குழு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒருங்கிணைந்த பொது நுழை வுத் தேர்வினை அடுத்த ஆண்டு முதல் நடத்துவ தற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது. தற்போதைய நிலவ ரப்படி 3 பொது நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வரு கின்றன. 

ஒன்றிய அரசு பரிசீலனை 

இந்த தேர்வுகள் அனைத்தும் என்.டி.ஏ. என அழைக் கப்படும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகின்றன.  இந்த படிப்புகள் அனைத்துக்கும் மாணவர் சேர்க்கையை கியூட் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் செய்ய பரிசீலிணைகள் நடைபெற்று வருகின்றன.

45 ஒன்றிய பல்கலைக்கழகங்கள் உட்பட 90 பல் கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நடப்பாண்டு தொடங்கப்பட்டது. இந்த தேர்வினை 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுத இருக்கின்றனர். ஆனால் 'நீட்' தேர்வினை எழுத 18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.  ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.   'நீட்' தேர்வுக்கு உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களும்,  ஜே.இ.இ.மெயின் தேர்வுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களும் அவசியம். இந்த பாடங்கள் ஏற்கெனவே 'கியூட்'டில் உள்ளது. எனவே மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு 'கியூட்' தேர்வு மதிப்பெண்களை பயன்படுத்துவதில் பிரச்சினை எதுவும் இருக்காது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து  ஒன்றிய கல்வி அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக்குழுவும் விவாதங்களையும், பரிசீலனைகளையும் மேற்கொண்டு வருகின்றன. மாணவர்களுக்கு அதிகப்படியான வாய்ப்பு களை தரும் வகையில் ஒவ்வொரு வருடமும் 2 முறை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப்பள்ளி தேர்வுகள் முடிந்ததும் முதல் அமர்வும், மற்றொரு அமர்வு தேர்வு நவம்பர் அல்லது டிசம்பர் மாதமும் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  


No comments:

Post a Comment