இந்தியாவில் குரங்கு அம்மை மாநிலங்களவையில் அமைச்சர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 3, 2022

இந்தியாவில் குரங்கு அம்மை மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்

 புதுடில்லி, ஆக.3 குரங்குஅம்மை குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - _ என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா கூறினார்.

நாட்டில் பரவி வரும் குரங்கம்மை நோய் குறித்து, நாடாளுமன்ற மாநிலங்களவை யில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு குறித்து விளக்கம் அளித்து பேசிய ஒன்றிய அமைச்சர்,  குரங்கு அம்மை நோய் கேரளாவில் கண்டறியப் பட்டது என்றவர், முன்னதாகவே,  குரங்கு அம்மை தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அளிக் கப்பட்டது என்பதை சுட்டிக் காட்டினார்.

மேலும், கேரளாவில் முதல் நோயாளி அடையாளம் காணப்பட்டதும் ஒன்றிய அரசு நிபுணர் குழுவை அனுப்பி மாநில அரசுக்குத் தேவையான உதவி களை அளிக்கத் தொடங்கிய தோடு, தொடர் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறது என்றவர்,  குரங்கு அம்மை புதிய வகை நோய் அல்ல என்பதையும் அது 1970களில் இருந்தே ஆப்ரிக்காவில் இருந்து வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்  குரங்கு அம்மை நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக் களிடையே ஏற்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து ஒன் றிய அரசு செயல்பட்டு வருவ தாகத் தெரிவித்தார்.

குரங்கு அம்மை குறித்து அச்சம் கொள்ளக்கூடாது என வலியுறுத்திய அமைச்சர், விழிப் புணர்வுடன் இருப்பதன் மூலம் இந்த பிரச்சினையை நம்மால் எதிர்கொள்ள முடியும் என்றார். குரங்கு அம்மை நோயால் பாதிக் கப்பட்டவர்கள், 12-13 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இதன் மூலம் அது பிறருக்கு தொற் றாமல் தடுக்க முடியும் என்றார்.

இந்த நோயை கட்டுப்படுத்த நிதி ஆயோக் உறுப்பினரின் தலைமையில் செயல்திட்டக் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், குரங்கு அம்மை நோய் வராமல் தடுக்க தடுப்பூசி தயாரிப்பதற்கான பணியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment