மதுரை, ஆக.20 தமிழ்நாட்டின் அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளி லும் டாக்டர் அம்பேத்கரின் உருவப் படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்புமாறு சட்டக்கல்வி இயக்குநருக்கு உயர்நீதி மன்ற மதுரைக் கிளை பரிந்துரை செய்துள்ளது.
தேனியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன்னை கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்து தேனி அரசு கல்லூரி முதல்வர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை ஆகஸ்ட் 18 வியாழனன்று நீதிபதி
ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு நடை பெற்றது. அப்போது நீதிபதி கூறுகை யில், “75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையிலும் சுதந்திரப் போராட்ட தலைவர்கள், சமூகத்தின் அடையாளமாக பார்க்கப் பட்டு வருகின்றனர். இந்த வழக்கை பொறுத்த வரை மனுதாரர் மீது ஒழுங்கு நடவடிக்கையாக இடை நீக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனு தாரர் கல்லூரி முதல்வர் அறையில் அம் பேத்கர் உருவப்படத்தை வைக்கவும், பாடங்களை தமிழில் பயிற்றுவிக்கவும் கோரியுள்ளார். இந்த கோரிக்கைகளை முன் வைத்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக வன்முறை மனோபாவத்துடன் நடந்து கொண்டுள்ளார். இதற்காக கல்லூரி முதல்வரிடம் எழுத்துப் பூர்வமாக மன்னிப்புக் கடிதம் வழங் கியுள்ளார். மனுதாரர் ஏற்கனவே இரண்டு வாரங்கள் இடைநீக்கம் செய் யப்பட்டுள்ளார்.
இந்த தண்டனை போதுமானது என இந்த நீதிமன்றம் கருதுகிறது. தேனி அரசு சட்டக் கல்லூரி முதல்வர் அறை யிலும் அம்பேத்கரின் உருவப்படம் வைக்கப்பட்டுவிட் டது. அம்பேத்கர் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பாளர். சமூக நீதியின் அடையாளம். ஒவ்வொரு சட்டக் கல்லூரி மாணவருக்கும் அவர் மிகச் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார். சென்னை சட்டக்கல்வி யின் இயக்குநர் தமிழ்நாட்டின் அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் டாக்டர் அம் பேத்கரின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்ப இந்த நீதிமன்றம் பரிந்துரை செய் கின்றது. மதுரைக்கிளை வழக்குரைஞர் நல வாரியத்தின் சார்பில் 10 ஆயிரம் ரூபாயை மனுதாரருக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு மனுதாரர் சட்ட புத்த கங்களை வாங்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. அம்பேத்கரின் பொன் மொழியில் மனு தாரர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவற்றில் முதலாவதான “கற்பி”என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நீதி மன்ற அறையில் டாக்டர் அம்பேத்கரின் உருவப்படம் இல்லை. விரைவில் இது நிவர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தார்.
No comments:
Post a Comment