பி.ஜே.பி. ஆட்சியைப் பாரீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

பி.ஜே.பி. ஆட்சியைப் பாரீர்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். அதிகாரிகள் 134 பேர் கடிதம்!

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை; ஒட்டுமொத்த பெண்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல்!

புதுடில்லி, ஆக. 30 - பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய 11 குற்றவாளி களையும் உச்ச நீதி மன்றம் முன்கூட்டியே விடுதலை செய்ததற்கு எதிராக ஓய்வு பெற்ற அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரி கள் 134 பேர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடந்த 2002 ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் நரேந்திரமோடி முதல மைச்சராக இருந்தபோது, கோத்ரா ரயிலில் தீ  விபத்து நிகழ்வு நடை பெற்றது. இதில் 59 பேர் பலியாகினர். அப்போது, இசுலாமியர்கள்தான் ரயிலுக்கு தீ வைத்தாகக் கூறி குஜராத் முழு வதும் இசுலாமியர்களுக்கு எதி ராக பெரும் வன்முறை அரங் கேற்றப் பட்டது.

பின்னாளில் 2005-ஆம் ஆண்டு இது தொடர்பாக ஒன்றிய அரசு  அமைத்த விசாரணை ஆணையம்,  ரயில் பெட் டியில் சமையல் செய்த போது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயி ரிழந்ததாகவும், வெளியிலி ருந்து யாரும் ரயிலுக்கு தீ வைக்கவில்லை என்று கண்டறிந்தது என்றாலும், பழிவாங்கும் நட வடிக்கை என்ற பெயரில் 2002இல் குஜராத்தில் ஆயிரக்கணக்கான இசுலாமியர்கள் கொல்லப்பட் டனர். 20 ஆயிரம் இசுலாமியர் களின் வீடுகள் மற்றும் கடைகள், மசூதிகள் சூறையா டப்பட்டன. 

இவ்வாறு கொல்லப்பட்டவர் களில் தாகோடு மாவட்டம் ரன் தீக்பூர்  கிராமத்தைச் சேர்ந்த பில் கிஸ் பானு வின் குடும்பத்தினர் 14 பேர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவார். 2002 மார்ச் 3 அன்று வன்முறையாளர்களுக்கு பயந்து பில்கிஸ் பானு வின் குடும்பம் தப்பித்துச் செல்ல முயன்றபோது சுற்றிவளைத்த 30 பேர் கொண்ட வன்முறைக் கும்பல்,  14 பேரை கொத்தாக படுகொலை செய் தது. இதில் பானுவின் 3 வயது குழந்தை சலேகா சுவரில் அடித்துக் கொல்லப்பட் டதுடன், 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு உள்பட 4 பெண்கள் கும்பல் வல்லுறவுக்கு உள் ளாக்கப்பட்டனர். பானு வின் வயிற்றில் இருந்த கருவும் கலைந்தது.

இந்த நிகழ்வு தொடர்பாக, ஜஸ்வந்த்பாய், கோவிந்த்பாய், ஷை லேஷ் பட், ராதேஷ்யாம் ஷா, பிபின்  சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானி யா, பிரதீப் மோர்தியா, பகபாய் வோஹா னியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா ஆகிய 11 பேருக்கு, மும்பை சிபிஅய் சிறப்பு நீதி மன்றம் 2008-ஆம் ஆண்டு ஆயுள் தண் டனை விதித்தது. இவர்கள் கோத்ரா கிளைச்சிறையில் அடைக்கப்பட் டிருந் தனர்.

நியாயமானதா?

இதனிடையே, சுதந்திர தின பவள விழா நிறைவையொட்டி, இந்த 11  பேரையும் குஜராத் பாஜக அரசு சிறையிலிருந்து விடுதலை செய்தது. இது நாடு முழுவதும் பெரும் விவா தத்தை ஏற்படுத்தியது. பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடு தலையை எதிர்த்து உச்சநீதிமன் றத்திற்கு 6 ஆயித்திற்கும் மேற் பட்டோர் கடிதம் அனுப்பினர். உமேஷ் சால்வி, என்ற ஓய்வு பெற்ற நீதிபதி “பில்கிஸ் பானு வழக்கில் தண் டனை குறைப்பு சட்டப்பூர்வமானதாக இருந்தா லும் அது நியாயமானதா?” என்ற கேள்வியை எழுப்பி, தனது கண்ட னத்தை பதிவு செய்தார். மேலும், 11 பேரின் விடுதலையை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் சுபா சினி அலி, திரிணாமுல் காங்கி ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா  மொய்த்ரா உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்றமும் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக் குமாறு ஒன்றிய பாஜக அரசுக்கும், குஜ ராத் பாஜக அரசுக்கும் தற்போது தாக் கீது அனுப்பி யுள்ளது.

அரசமைப்பு நடத்தைக்குழு?

இதனிடையே, பில்கிஸ் பானு  வழக்கில் தொடர்புடைய 11 குற்றவாளி களும் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக, ஓய்வுபெற்ற அய்ஏஎஸ், அய் பிஎஸ் அதிகாரிகள் 134 பேரும் தங்களின் அதிருப்தியை பதிவு செய்துள்ளனர். இதுதொடர் பாக, உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி யாக பொறுப் பேற்றிருக்கும் யு.யு. லலி த்திற்கு ‘அரசமைப்பு நடத்தைக் குழு’ என்ற தலைப்பில் பகிரங்க கடி தம் ஒன்றை அவர்கள் எழுதியுள் ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: ‘‘சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தில் குஜராத்தில் நடந்ததைக் கண்டு, நம் நாட்டின் பெரும்பான்மையான மக்களைப் போலவே, நாங்கள் அதிர்ச்சிய டைந்திருக்கிறோம். பில்கிஸ் பானுவின் கதை உங்களுக்கு தெரியும், அபாரமான தைரியம் மற்றும் விடாமுயற்சியின் கதை அவருடையது. இந்த அடிபட்ட  மற்றும் காயங்களுக்கு உள்ளான இளம் பெண், தன்னை துன் புறுத்தியவர் களிடமிருந்து தப்பி,  நீதிமன்றங் களில் நியாயம் கேட்க முடிந்தது என்பது ஒரு குறிப்பிடத்தக்க தைரியத்தின் கதை.

இந்த கொடூரமான குற்றத்தில்  குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், அரசியல் ரீதியாக மிகவும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருந்ததால், குஜராத் காவல் துறைக்கு பதிலாக ஒன்றிய புல னாய்வுப் பிரிவு (சிபிஅய்) இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், இந்த வழக்கு வேறு மாநிலத்திற்கு மாற்றப் படவும் வேண்டியிருந் தது. பில்கிஸ் பானுவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால், நியாயமான விசாரணையை உறுதி செய்ய, வழக்கு மும்பையில் உள்ள சிபிஅய் சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப் பப்பட்டது. பில்கிஸ் பானு தனது உயிருக்கு இருந்த அச்சுறுத்தல் காரண மாக பல ஆண்டுகளாக 20 முறை வீடுகளை மாற்ற வேண்டியிருந்தது. இந்த வழக்கு அரிதானது. அவ்வறிக் கையில் 11பேரின் விடுதலை பயங்கரமான தவறு. வழக்கின் குற்றவாளிகள் கும்பல் பாலியல் வன்கொடுமை குற்றத்துக் காகவும் கொலைக் குற்றத்துக்காகவும் தண்டனை பெற்றவர்கள். அதுமட்டு மின்றி வழக்கின்  ஆதாரங்களையும் சாட்சியங்களையும் அழிப்பதற்கு அவர் கள் முயற்சித்தவர்கள். இதற்காக, காவல்துறையினரும் மருத்துவர் களும் கூட இந்த வழக்கில் தண்டிக்கப்பட் டனர்.

மகாராட்டிர அரசு  விசாரித்திருக்க வேண்டும்

இவ்வாறு, இந்த வழக்கின் வரலாற் றையும், குற்றவாளிகளுடன் குஜராத் அரசு அதிகாரிகள் கூட்டு சேர்ந்திருப் பதையும் பார்த்தால், இந்த விவகாரம் வேறு விதமாக கையாளப்பட்டிருக்க வேண்டும். வி.சிறீஹரன் வழக்கில் [டிசம்பர் 2015]  அரசமைப்பு அமர்வு வகுத்த நடைமுறைகள், மே 13 அன்று ராதேஷ்யாம் ஷா (பில்கிஸ் பானு  வழக்கு குற்ற வாளி) தீர்ப்பில் பின்பற்றப் படாதது கெட்டவாய்ப்பானது. - குஜராத் அரசுக்குப் பதிலாக- பில்கிஸ் பானு வழக்கு விசா ரணை நடை பெற்ற மகாராட்டிர அரசு-தான் ராதேஷ்யாம் ஷா மன்னிப்பு மனுவை விசாரித் திருக்க வேண்டும் என்று நாங் கள் கருதுகிறோம். 

குழுவின் 10 பேரில் 5 பேர் பாஜகவினர் 

மேலும், குற்றவாளிகளின் முறை யீட்டை 1992-ஆம் ஆண்டு குஜராத் மாநில நிவாரணக் கொள்கையின்படி விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன் றம் உத்தரவிட்டதும், இரண்டு மாதங்களுக்குள் இதில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று அவசரம் காட்டியதும்- எங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. முன்கூட்டியே விடுதலை செய்ய அனுமதித்த ஆலோசனைக் குழுவில் இடம் பெற்ற 10 உறுப்பினர்களில் 5 பேர் பாஜக-வைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சியளிக் கிறது. இது பாரபட்ச மற்ற தன்மை மற் றும் சுதந்திரமான நடைமுறை யின் மீது முக்கியமான கேள் வியை எழுப்புகிறது, மேலும் செயல்முறை மற்றும் விளைவு இரண்டை யும் பாதிக்கிறது. 

11 பேரை விடுவிப்பது பானு மற்றும் அவரது  குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை எவ்வாறு  பாதிக்கும் என்பதைக் கண்டறிய குஜராத்  அரசு கடமைப் பட்டுள்ளது. ஏனெனில், குற்ற வாளிகளின் விடுதலை பானுவின் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதர வாளர்களுக்கு மட்டுமின்றி, இந்தியா வில் உள்ள அனைத்து பெண்களின் பாது காப்பிலும் குறிப்பிடத்தக்க தாக் கத்தை ஏற்படுத்தும். ஆனால், நிறுவப் பட்ட சட்டத்திலிருந்து நடைபெறும் இந்த வெளிப் படையான விலகல்கள் பில்கிஸ் பானு குடும்பத்தினரின் பாது காப்பை மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள பெண்களின் ஒட்டு மொத்த பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி யுள்ளது.

முடிவைத் திருத்தும் உரிமை

குஜராத் அரசின் இந்த முடி வால்,  நாங்கள்  மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாலும், இந்த கொடூர மான தவறான முடிவைத் திருத்துவதற் கான முதன்மை அதிகாரம் உச்ச நீதி மன்றத்திற்கு மட்டுமே உண்டு என்று நாங்கள் நம்புவ தாலும் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறோம். எனவே, இத னைக் கருத்தில் கொண்டு குஜராத் அரசு பிறப்பித்துள்ள நிவாரண உத்த ரவை ரத்து செய்யு மாறும், கும்பல் வல் லுறவு மற்றும்  கொலைக் குற்றவாளி களான 11 பேரையும் மீண்டும் சிறையில் அடைத்து ஆயுள் தண்டனையை நிறை வேற்றுமாறும் கேட்டுக் கொள்கிறோம். 

இவ்வாறு அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.  டில்லியின் மேனாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், மேனாள் அமைச்சரவைச் செய லர் கே.எம். சந்திரசேகர், மேனாள் வெளி யுறவுச் செயலர்கள் சிவசங்கர் மேனன், சுஜாதா சிங், மேனாள் உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை, வஜாஹத் ஹபி புல்லா, ஹர்ஷ் மந்தர், ஜூலியோ ரிபெய்ரோ, அருணா ராய், ஜி. பாலச் சந்திரன், ரேச்சல் சாட் டர்ஜி, நிதின் தேசாய், எச்.எஸ். குஜ்ரால், மீனா குப்தா  உள்ளிட்ட 134 பேர் கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளனர்.

No comments:

Post a Comment