தமிழறிஞர் நெல்லை கண்ணன் மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 20, 2022

தமிழறிஞர் நெல்லை கண்ணன் மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

மூத்த தமிழறிஞர், தமிழ்க் கடல் நெல்லை ‌கண்ணன் 18.8.2022 அன்று மதியம் இயற்கை எய்தினார். அவரது உட லுக்கு  திராவிடர்  கழகம் சார்பில் நெல்லை மாவட்டத் தலை வர் இரா.காசி, மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன், மாவட்டத் துணைத் தலைவர் ச.இராசேந்திரன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

நெல்லை கண்ணன் துணைவியார், மருமகன்கள் சரவணன், ஆறுமுகம்  மற்றும் உறவினர்களிடம் இரங்கலைத் தெரிவித்ததுடன், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின்  இரங்கல் அறிக்கையை  அளித்து ஆறுதல் தெரிவித்தனர். அவர்‌ குடும்பத்தினர்  தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment