அய்தராபாத்,ஆக.25- சர்ச்சை பேச்சு காரணமாக கைது செய்யப் பட்டுள்ள தெலங்கானா பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங்கை, பாஜக மேலிடம் இடை நீக்கம் செய்தது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சஞ்சல் கூடா சிறையில் அடைக்கப்பட்டார்.
அய்தராபாத் கோஷாமகால் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜாசிங் (வயது45). நபிகள் நாயகம் மீது அவதூறு பேசியதாக, அய்தராபாத் காவல் துறையினரால் கைது செய்யப்பட் டார்.
முன்னதாக, நகைச்சுவை மேடை பேச்சாளரான முனாவர் ஃபாருக்கி என்பவர், ஒரு நிகழ்ச்சியின்போது, ராமன் மற்றும் சீதை குறித்து பேசியுள்ளார். இதனால், பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங், அடுத்த முறை முனாவர் ஃபாருக்கி இந்து கடவுள்களை தரக்குறைவாக பேசினால், நான் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசுவேன் என்று மதவெறிக்கு வித்திடும்வகையில் பேசினார். மேலும், பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜாசிங், நபிகள் நாயகம் குறித்துபேசி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது அய்தராபாத்தில் வைரல் ஆனது. இதனால், எம்அய்எம் கட் சியை சேர்ந்த சட்டமன்ற உறுப் பினர்கள், அய்தராபாத் மாநக ராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் என நூற்றுக்கணக்கா னோர், அய்தராபாத்தில் காவல் துறை ஆணையர் அலுவலகம் உட்பட அனைத்து காவல் நிலை யங்கள் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக பாஜக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டுமென அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங்கை அய்தராபாத் காவல் துறையினர் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதை யடுத்து ராஜா சிங் சஞ்சல் கூடா சிறையில் அடைக்கப் பட்டார். இதற்கு முன்பாக ராஜா சிங் ஆதரவாளர்களுக்கும், எதிர் தரப் பினருக்கும் இடையே நீதி மன் றத்துக்கு வெளியே கை கலப்பும், வாக்குவாதங்களும் நடந்தன. காவல் துறையினர் நிலைமையை கட்டுப்படுத்தினர்.
இந்நிலையில், கட்சியின் கொள் கைகளுக்கு எதிராக மத நல்லெண் ணத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் பேசியதாக பாஜக உறுப்பினர் ராஜாசிங்கை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக பாஜக மேலிடம் அறிவித்தது. மேலும், இது தொடர்பாக இன்னும் 10 நாள்களுக்குள் விளக் கம் அளிக்க வேண்டுமெனவும் பாஜக மேலிடம் ராஜாசிங்கிற்கு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment