விடுதலை ஆசிரியர் குருசாமி அவர்கள் மறைவின்போது, மயானம் நோக்கி இறுதி ஊர்வலத்தின் போது நடந்து செல்கையில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அண்ணா அவர்களுடன் நடந்து சென்றார்.
அப்போது என்.வி.என் அவர்கள் அண்ணாவிடம் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சுட்டிக்காட்டி அப்போது வெளிவந்த விடுதலை வண்ண அட்டைகள், உள்ளே புகைப்பட இணைப்புகள், பல சுவையான அம்சங்கள் இவையெல்லாம் எடுத்துக் கூறி, “அண்ணா, நமக்கெல்லாம் தராத தாராள பொருளாதார சுதந்திரத்தினை அய்யா அவர்கள் வீரமணிக்கு இப்போது விடுதலையில் வழங்கி உள்ளார் என்பது, அவர் பல கலர்களில் அட்டை மற்றவைகளை வெளியிடுவதில் இருந்து தெரியவில்லையா?” என்றார்.
அண்ணாவும் சிரித்துக் கொண்டே “ஆமாம். நான் கூட விடுதலை மலரினை பார்த்து யோசித்தேன், நமக்கெல்லாம் தராத சுதந்திரத்தினை வீரமணிக்கு ஏராளம் தந்துள்ளார் அய்யா. அதனால்தான் விடுதலை மலர் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி உள்ளது. ரொம்ப ஆச்சரியமாகத்தான் உள்ளது. வீரமணி காலம் ரொம்ப மாறிய காலம் ஆகிவிட்டது” என்று நகைச்சுவை ததும்ப சிக்கனக்காரரான தந்தை பெரியார் எப்படி இவ்வளவு தாராளமாக மலர் - அதுவும் பல வண்ணங்கள் அட்டையுடன் அச்சிட்டு பரப்ப அனுமதித்தார் என்று வியந்தே கூறினார்கள்.
ஆதாரம்: ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ பாகம் - 1
No comments:
Post a Comment