டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
ஆகஸ்டு 6இல் பிரதமர் மோடி ஏற்பாடு செய்துள்ள ஆசாதி கி அம்ரித் உத்சவ் கூட்டத்தை தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் புறக்கணிப்பு.
இந்தியாவை ஒற்றை கட்சி ஆட்சிமுறைக்குள் தள்ள பாஜக முனைகிறது, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கண்டனம்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
மும்பையை விட்டு குஜராத்திகள் ராஜஸ்தானிகள் வெளியேறினால், இந்தியாவின் தொழில் தலைநகரமாக மும்பை நீடிக்க முடியாது என்ற தனது கருத்துக்கு அம்மாநில ஆளுநர் கோஷ்யாரி மன்னிப்புக் கேட்டார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
ஜி.எஸ்.டி. வரி உயர்வு காரணமாக பென்சில், மேனா, விலை உயர்த்தப்பட்ட நிலையில், 'பென்சில் கேட்டால் அம்மா அடிப்பார்' எனபிரதமர் மோடியிடம் குழந்தை புகார். சமூக வலைத்தளங்களில் வைரல் செய்தியானது.
தி டெலிகிராப்:
தொடர்ந்து குஜராத் துறைமுகத்தில் இருந்து ஏன் போதைப்பொருள் கடத்தப்படுகிறது? சி.பி.அய்., அமலாக்க இயக்கு நரகம் ஏன் விசாரிக்க மறுக்கிறது? என மோடி அரசுக்கு காங்கிரஸ் கேள்வி.
.- குடந்தை கருணா
No comments:
Post a Comment