மதுரை,ஆக.30- திருவாரூரில் அமையப்பெற்றுள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தொலைதூரத்தில் தேர்வு மய்யம் அமைத்து, அம்மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் சூழ்ச்சிகுறித்து மாணவர்களும், பெற்றோரும் கொதிப்படைந்துள்ளனர்.
மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மய்யங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு தமிழ் நாட்டில் இருந்து ஏராளமான மாணவர்கள் விண்ணப் பித்துள்ளனர்.
இந்த நிலையில், திருவாரூரில் இருக்கும் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு விண்ணப்பித்த மது ரையை சேர்ந்த மாணவருக்கு லட்சத் தீவில் தேர்வு மய்யம் அமைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
இதுகுறித்து மதுரை மக்களவை உறுப்பினர் வெங்க டேசன் தனது முகநூல் பதிவில் கருத்து பதிவிட்ட அவர், "மதுரை மாணவருக்கு இலட்சத்தீவில் தேர்வு மய்யமா? நுழைவுத்தேர்வுக்கு அலைகடல் தாண்டி பயணப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30, 2022 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.மதுரையிலிருந்து விண்ணப்பித்த மாணவர் ஒருவருக்கு தேர்வு மய்யத்திற்கான அனுமதி சீட்டு இரண்டு நாட் களுக்கு முன்புதான் வந்துள்ளது. தேர்வு மய்யமோ இலட்சத் தீவில் என்று இருந்துள்ளது. அதனால், அம்மாணவரும், அவர் பெற்றோரும் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இது போன்ற மாணவர்களுக்கு மய்யத்தை மாற்றுங்கள் என்றும், தேர்ச்சி பெறுவதை விட தேர்வு மய்யத்துக்கு சென்று சேர்வது கடினம் என்ற நிலையை உருவாக்கா தீர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment