இது ஒரு ‘கின்னஸ்'
சாதனைதான்!
கேட்பவர்கள்
ஆச்சரியக் குறியாக
நிற்கிறார்கள்
‘ஓர் ஏட்டுக்கு
அறுபதாண்டு ஆசிரியரா?'
ஆச்சரியக் குறியின்
அசல்வேர் அதுதான்!
இன்னொரு ஆச்சரியம்!
“வீரமணியிடம்
விடுதலை ஏட்டை
ஏகபோகமாக ஒப்படைக்கிறேன்!”
இப்படி சொன்னவர்
ஈரோட்டு ஏந்தல் என்றால்
ஆச்சரியக் குறிக்கே
ஆச்சரியமே!
அய்யாவைத்
தெரிந்தவர்களுக்கு
அட்சரம் பிறழாமல்
தெரியும்!
அவ்வளவு எளிதாக
அவர் வாய் இது போன்ற
சொற்களை உதிர்க்குமா?
அதைவிட இன்னொரு
ஆச்சரியம்!
ஆசிரியர் வீரமணியின்
தோளைப் பிடித்து அழுத்தி
அந்த ஆசிரியர் நாற்காலியில்
அமர வைத்தாரே!
அடடே, இந்தப் பேறு
வீரமணிக்கல்லால்
வேறு யாருக்குக் கிடைக்கும்!
ஆச்சரியத்துக்குமேல் ஆச்சரியங்கள்
அணி வகுக்கின்றன....
நான்கு பக்க விடுதலை
எட்டுப் பக்கமாக
எழில் வண்ணங்களுடன்
சென்னைப் பதிப்போடு
நிற்கவில்லை
திருச்சியிலும் மேலும்
ஒரு பதிப்பு!
இணையத்தில் முதலில்
வெளிவந்த
ஈடு இணையிலா கிரீடமும்
‘விடுதலை’க்கே - இந்த
வீரமணியின் வண்ணத்தால்!
50 ஆண்டு ஆசிரியருக்கு
50 ஆயிரம் சந்தாக்கள்
என்பதும்
60 ஆண்டு ஆசிரியருக்கு
60 ஆயிரம் சந்தாக்கள்
என்பதும்
கருஞ்சட்டைத் தேனீக்கள்
சேகரிப்பது என்பதும்கூட
இந்த உலகில்
ஆச்சரியப் புன்னகைதான்!
ஆசிரியர் அவர்கள்
நூறாண்டு ஆசிரியராகி
நூறாயிரம் சந்தாக்களை
அள்ளிக் கொடுக்க
அரிய உழைப்பாம்
ஊசி முனையில்
‘தவமிருப்போம்!’
கழகத்தை மட்டுமா
வழி நடத்துகிறார்?
‘திராவிட மாடல்’ அரசை
திசையெங்கும்
ஒளி ஏற்றுகிறார்!
எளிமையின் உருவத்தில்
இத்தகு சேனையின்
வலிமையா?
எதிரிகளின் கண்களாம்
கணைகள்
இவரை நோக்கியே!
மார்பைத் தூக்கி
மறப்பாட்டுப் பாடுவோம்!
மகத்தான தலைவரின்
மானமிகு சீடர்கள் நாம்!
வீரமணி ஒலிக்கட்டும்!
வெற்றி ஒலி கேட்கட்டும்!
நமது வேக நடை
தொடரட்டும்!
நாளை உலகு
நமதே!
உலகும் பெரியார்
மயமே!
No comments:
Post a Comment